ரியோ டி ஜெனிரோ: துப்பாக்கி ஏந்தி வந்த கொள்ளையன் மூதாட்டிக்கு முத்தம் கொடுத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணத்தை கொடுத்துவிடுகிறேன்..! கதறிய பெண்மணி..! கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து திருடன் செய்த நெகிழ்ச்சி செயல்! வைரல் வீடியோ!
பிரேசில் நாட்டின் மருந்து விற்பனைக் கடை ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென துப்பாக்கி ஏந்திய முகமூடிக் கொள்ளையர்கள் 2 பேர் உள்ளே நுழைந்து, அனைவரையும் மிரட்டினர். பிறகு, ஒவ்வொருவரிடமும் இருந்து பணம் பறிப்பதோடு, கடையில் இருந்த பணம் மற்றும் பொருட்களையும் அவன் எடுத்துச் சென்றனர்.
அப்போது, அங்கிருந்த மூதாட்டி ஒருவர் தனது கையில் இருந்த பணத்தை கொடுக்க வந்தார். இதனை மறுத்த கொள்ளையர்களில் ஒருவன், அந்த மூதாட்டியின் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு, உங்கள் பணம் தேவையில்லை மேடம், கவலைப்படாதீர்கள் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றான். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
அந்த வீடியோவை ஆய்வு செய்த போலீசார், இச்சம்பவத்தை பார்த்து வியப்படைந்தனர். இதுபற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே குறிப்பிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. திருடனுக்குக் கூட மனிதாபிமானம் உள்ளதாக, பலரும் விமர்ச்சிக்கின்றனர்.