காரைக்குடி சேர்ந்த இளம்பெண் பணியிடத்தில் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக வெளியிட்ட வீடியோ பெரும் வைரலாகி வருகிறது.
பணியிடத்தில் செக்ஸ் தொல்லை! கைவிட்ட கணவன்! இள்மபெண் கதறும் வீடியோ வைரல்!
காரைக்குடி அருகே ஜேம்சன் சோ ரூமில் கடந்த சில மாதங்களாக வேலைபார்த்து வந்தவர் கார்த்திகா, திருமணமாகி 11 மாதமே ஆன குழந்தை உள்ளநிலையில் தொடர்ந்து வேலை ஸ்தலத்தில் உடன் வேலைப்பார்ப்பவர்களால் பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கபடுதாகவும், இதனால் கணவருடன் மன்ஸ்தாபம் உண்டானதாகவும் வீடியோ பதிவில் கண்ணீருடன் பதிவு செய்யும் கார்த்திகா.
அந்த சம்மந்தபட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் , கார்த்திக் ராஜாவிடம் இது குறித்து நேரிடையாக புகார் அளித்தும் அவர், முறையான பதில் அளிக்காமல் , கார்த்திகாவை மிரட்டும் தோணியில் பேசியதாக குறிப்பிடுபவர், வேறு வழியில்லாமல் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்தவர்.
தனதுதற்கொலைக்கு காரணமான உடன் வேலையாட்களையும், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இறுதியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயல்வது போல் நிறைவடையும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இது குறித்து காவல் துறையினர் முறையான விசாரணை துவங்கி உண்மை நிலை கண்டறிய கோரிக்கை எழுந்து வருகிறது.