பூங்காவில் உடற்பயிற்சி செய்யும் பேய்கள்..! காண்போரை திகில் அடைய வைக்கும் வீடியோ உள்ளே!

தனியார் பூங்கா ஒன்றில் உடற்பயிற்சி செய்யும் இயந்திரம் தானாக அசைவது போன்ற வீடியோகாட்சி ஒன்று சமூக வலைதளங்கள் வைரலாக பரவி வருகிறது.


பேய்களும் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி செய்கின்றன என பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் உடற்பயிற்சி செய்துவிட்டு பூட்டி விட்டு சென்ற நிலையில் இரவு நேரத்தில் உபகரணங்கள் காற்றில் அசைந்துள்ளது. அது பார்ப்பதற்கு உபகரணத்தின் மீது ஒருவர் அமர்ந்து உடற்பயிற்சி செய்வது போல இருந்துள்ளது. அதை பார்த்த வனத்துறை அதிகாரி ஒருவர் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

அப்போது அதில் இரவு நேரத்திலும் கூட பேய்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்கின்றன என வீடியோவின் கீழ் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.