பிறந்த குழந்தையை கீழே போட்ட கொடூர டாக்டர்: பிறகு நேர்ந்த அதிசயம்!

பிறந்து சில நிமிடங்களே ஆன குழந்தையை டாக்டர் ஒரு கீழே போட்ட வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ,கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதியன்று பெண் ஒருவருக்கு, இரட்டை குழந்தைகள் பிறந்தன. 10 மாதங்கள் நிறைவடைய 7 நாட்கள் இருக்கும்போதே, அவருக்கு திடீரென குழந்தை பிறந்துவிட்டது. இதற்காக, பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணை பின்பற்றி, அவரின் கணவரும் உள்ளே அழைக்கப்பட்டுள்ளார்.  அவர், குழந்தை பிறக்கும் நிகழ்வை படம்பிடித்துள்ளார். 

அப்பாது, டாக்டர் ஒருவர், பிறந்த 2 குழந்தைகளில், ஒன்றை கையில் எடுத்து, துணி சுற்றும் வேலை செய்துகொண்டிருந்தார். எதிர்பாராவிதமாக, அந்த குழந்தையை கீழே போட்டுவிட்டார். பின்னர்,  பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், அந்த குழந்தையை மீண்டும் எடுத்து, துணியை சுற்றி வைத்துவிட்டார்.இதனை பெண்ணின் கணவர் வீடியோவாக எடுத்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதேசமயம், குழந்தை கீழே விழுந்தாலும், பெரிதா அடிபடவில்லை எனக் கூறப்படுகிறது.