சென்னையில் குடிபோதையில் தாறுமாறாக காரை இயக்கி பெரும் விபத்து, விசாரித்த போலீசாரை ஆபாசமாக வசைப்பாடிய இளைஞர் சர்ச்சை வீடியோ வைரல்....
நள்ளிரவில் தாறுமாறாக ஓடிய ஹோண்டா சிட்டி கார்! பிறகு நேர்ந்த விபரீதம்!

சென்னையில் நேற்று இரவு குடி போதையில் தாறுமாறாக காரினை இயக்கிய இளைஞர், விபத்து குறித்து விசாரணை செய்த போலீசாரை ஆபாச வார்த்தைகளால் திட்டுவதும், தாக்க முயற்சி செய்யும் வீடியோ வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னை, நீலாங்கரையில், நேற்று நள்ளிரவில் வேகமாக வந்த கார் மோதியதில் 7 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ உள்ளிட்டவை நசுங்கியது மேலும் தாருமாறாக சாலையில் ஓடிய கார் வேகமாக அங்கிருந்த சுவரில் மோதி முன் பகுதி மொத்தமாக நாசமானது.
இந்த சமவத்தின் போது, அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், காரை இயக்கிய இளைஞரை மடக்கி பிடித்து விசாரணை செய்த போது, அவர் மது போதையில் இருந்தார், இதற்கிடையில் விசாரணை செய்த போலீசாரை தகாத ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதுடன் தாக்க முயற்சி செய்த வீடியோ பரவி சர்ச்சையை கிளப்பி வருகிறது.
ஏற்கனவே, இதே போன்ற மது போதையில் காரை ஓட்டி சென்றவர்களை தட்டி கேட்ட காவலரை நுங்கம்பாக்கம் அருகில் சரமாரியாக தாக்கிய சம்பவம் குறிப்பிடத்தக்கது, மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களின் இந்த அவல நிலை நாட்டின் பாதுகாப்பு மீது சந்தேகத்தை ஏறடுத்துகிறது.