பிறக்கும் போதே 2 கைகளும் இல்லை! ஆனாலும் கால்களால் சாப்பிடும் பச்சிளம் குழந்தை! நெஞ்சை உலுக்கும் வீடியோ!

டெல்லி: தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, சமீபத்தில் வாட்ஸ்ஆப்பில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றை பார்த்து கண்கலங்கியுள்ளார்.


ஆம். மகிந்திரா குழுமத்தின் தலைவராக உள்ள ஆனந்த் மகிந்திரா மட்டுமல்ல, இந்த வீடியோவை  பார்ப்பவர் யாராக இருந்தாலும் கண்கலங்குவது நிச்சயம். ரஷ்யாவை சேர்ந்த வாசிலினா நொட்சென் என்ற 2 வயது பெண் குழந்தை, இரண்டு கைகள் இல்லாமல், பிறந்த நிலையில், தனது காலை கை போல பயன்படுத்தி உணவு சாப்பிடும் காட்சிதான் அந்த வீடியோவில் உள்ளது. காலில், முள் கரண்டியை பிடித்தபடி, அந்த குழந்தை சாப்பிடுவதைப் பார்த்து, பலரும் கண்ணீர் வடித்து வருகின்றனர்.  

இந்த வீடியோ பற்றித்தான் ஆனந்த் மகிந்திரா, ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''எனது பேரனை சமீபத்தில்தான் சந்தித்தேன். அடுத்த சில நாளிலேயே இந்த வீடியோவை பார்த்ததும் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. வாழ்க்கை மிகக் கடினமானது, நாம் அதை சவாலாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ சிறந்த வழிகாட்டியாக உள்ளது,'' என்று ஆனந்த் மகிந்திரா குறிப்பிட்டுள்ளார்.  

ஆனந்த் மகிந்திராவின் ட்விட்டர் பதிவை பலரும் பாராட்டியும், நெகிழ்ந்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை 50,000 லைக் மற்றும் 10,000 ரீட்வீட்களையும் அவரது பதிவு இதுவரை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.