விராட் கோலி கிரிக்கெட் மட்டும் விளையாடட்டும், அரசியல் வேண்டாமே!

உலகின் நம்பர் ஒன் பேட்ஸ் மேன் என்ற பட்டம் விராட் கோலிக்கு உரியதுதான். ஆனால், சமீபத்தில் அவர் பேசிய பேச்சு இந்தியர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்க்யுள்ளது.


ஆம், குடியுரிமைச்சட்டம் குறித்து இன்று கவுஹாத்தியில் செய்தியாளர்கள் விராட் கோலியிடம் கேட்டார்கள். எனக்கு அரசியல் வேண்டாம் என்று அவர் அந்தக் கேள்வியைத் தவிர்த்திருக்கலாம்.

ஆனால், “முழு தகவல்களையும் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அப்படித் தெரிந்துகொண்ட பிறகுதான் கருத்துச் சொல்ல முடியும். அப்போதும் பொறுப்போடு கருத்துச் சொல்ல வேண்டும். ஏனென்றால் இரண்டு தரப்பிலேயும் தீவீரமான கருத்துகள் சொல்லப்படுகின்றன…” என்று பேசியிருக்கிறார்.

அவர், இந்தியாவில்தான் இருக்கிறார் எனும்போது, இத்தனை நாளும் குடியுரிமை சட்டம் பற்றி தெரிந்துகொள்ளாமல் என்னதான் செய்தார்? அந்த சட்டத்துக்கு ஆதரவு நிலை என்பதைத்தான் இப்படி சொல்லியிருக்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாமா?

ஏனென்றால், ஏற்கெனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை வந்த நேரத்தில், அது தேசத்துக்கு நல்லது என்று கூறியிருந்தார் விராட் கோலி. இந்த நேரத்தில் மழுப்புவதற்கு காரணம் அவர் மோடியின் கையாள் என்பதால்தானா?

கோலி நீங்கள் பேட் பிடித்து விளையாண்டால் மட்டும் போதும், அரசியல் பேசி வீணாக வேண்டாம்.