கார்கில் போரில் கால்களை இழந்த போர் வீரன்! 20ம் ஆண்டில் செய்த நெகிழ வைத்த செயல்! வைரல் புகைப்படம்!

டெல்லி: கார்கில் தினத்தை முன்னிட்டு, அதில் பங்கேற்று காலை இழந்த ராணுவ வீரர் மேஜர் சிங் தீபம் ஏந்தி ஓடினார்.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் டிராஸ் செக்டார் பகுதியில், விஜய் திவாஸ் கொண்டாட்டத்தை ஒட்டி, வெள்ளிக்கிழமை அவர் இந்த வெற்றி தீபத்தை ஏந்தியபடி ஒடினார். இந்த தீபம் முதலில் கடந்த ஜூலை 14ம் தேதி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.    

இந்திய ராணுவ அகாடமியில் படித்தவரான மேஜர் சிங், 1997ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணிக்குச் சேர்ந்தார். அப்போது அவருக்கு 25 வயது. அப்போதுதான் கார்கில் போர் ஏற்பட்டது. இதில், வீரத்துடன் போரிட்ட இந்திய வீரர்களில் மேஜர் சிங்கும் ஒருவர் ஆவார்.

இதன்போது, அவர் தனது கால்களில் ஒன்றை இழந்தார். பிறகு, போர் முடிந்ததும் உடனடியாக, வெளிநாட்டில் இருந்து செயற்கை கால் (பிளேட்) வரவழைக்கப்பட்டு, அவருக்குப் பொருத்தப்பட்டது.

இந்தியாவிலேயே, இத்தகைய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது அவருக்குத்தான் முதல்முறையாகும். இதன்பின், இந்தியாவின் முதல் பிளேட் ரன்னர் என்ற பெருமையுடன் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று வரும் மேஜர் சிங், தற்போது கார்கில் போர் வெற்றியை நினைவுகூறும் இந்த தீபத்தை ஏந்தி ஜம்மு காஷ்மீரில் ஓடிவருவது குறிப்பிடத்தக்கது.