நூடுல்ஸ் விருந்து! சாப்பிட்ட உடன் துடிதுடித்து பலியான 7 பசுக்கள்! விழுப்புரம் பரிதாபம்!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காலாவதியான நூடூல்சுகளை சாப்பிட்ட 7 மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்த சம்பவம் மாடுகளின் உரிமையாளர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மொரட்டாண்டி முந்திரி கட்டுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த 7 பசுமாடுகள் சில நாட்களுக்கு முன்னர் ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்தது. இதை அடுத்து பசுவின் வயிற்றை ஆய்வு செய்த கால்நடை மருத்துவர்கள் இரைப்பையில் நூடுல்ஸ் ஜீரணமாகாமல் தேங்கி இருப்பதையும் அதனால் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். 

இதை அடுத்து மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த பகுதியை கிராம மக்கள் சென்று பார்த்தபோது முந்திரிக்காட்டு பகுதியில் மூட்டை மூட்டையாக ஏப்ரல் மாதத்தில் காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் கிடந்தது.

இதையடுதது காலவதியான நூடுல்ஸ் சாப்பிட்டதால்தான் மாடுகள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்த மருத்துவர்கள் இரைப்பையில் சேகரிக்கப்பட்ட நூடுல்ஸ் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஒருவேளை இந்த நூடுல்ஸை மனிதர்கள் பயன்படுத்தினாலும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் எச்சரித்தனர்.

பொதுவாக பாக்கெட்டில் அடைக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கும்போது அதை காலவதியான தேதிக்குள் பயன்படுத்த வேண்டும். காலவதி தேதிக்கு பின்னர் பயன்படுத்தும்போது எதுவும் ஆகாது என நாமாக கற்பனை செய்து கொண்டு பயன்படுத்தக்கூடாது. ஏன் என்றால் அதில் பொருட்கள் கெடமால் இருக்க கலக்கப்படும் ரசாயன பொருட்கள் தன்னுடைய தன்மையை இழந்து விஷமாக மாறிவிடும்.

காலவதியான பொருட்களை குப்பைகளில் கண்ட இடத்தில் போடாமல் தீயிட்டோ அழித்திருந்தால் 7 பசுமாடுகள் உயிரிழந்திருக்காது. பசுமாடுகளின் ஆதாரத்தையே நம்பியிருந்த விவசாயி தற்போது விரக்தியில் உள்ளார்.