ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுவனையும், சிறுமியையும் ஆடைகளைக் களைந்து நிர்வாண ஊர்வலம் வரச் செய்த கிராமத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இளம் காதல் ஜோடியை நிர்வாணமாக்கி ஊர்வலம்! ஒரு கிராமமும் திரண்டு விபரீத செயல்!

தும்கா மாவட்டத்துக்குட்பட்ட கிராமத்தில் தான் அந்த பரிதாபத்துக்குரிய ஜோடி கிராம மக்களிடம் சிக்கியிருக்கிறது. அவர்களின் ஆடைகளைக் களைந்த கிராம மக்கள் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் அவர்கள் கிராமம் முழுவதும் நிர்வாண ஊர்வலம் வரச் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்ற போது மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் நிர்வாண ஊரவலம் விடப்பட்ட வீடியோவும் கிடைத்தது.
அந்த வீடியோவில் இருந்த நபர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்நிலையில் அந்த இருவரையும் கிராமத்தினர் எதற்காக தாக்கி நிர்வாண ஊர்வலம் வரச் செய்தனர் என்பதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.