விக்கிரவாண்டியும், நாங்குநேரியும் நமக்குத்தான்! ஆனந்தத்தில் எடப்பாடி. ஆப்பு வைத்த வசந்தகுமார்!

விக்கிரவாண்டியில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கடுமையாக மோதும் என்ற நிலைமை இப்போது இருக்கிறது.


இந்தப் போட்டி அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்குமான போட்டியாகத்தான் இருக்கிறது. சி.வி.சண்முகத்துக்கு இதுவரை ஆதரவாக இருக்கும் பா.ம.க. தொடர்ந்து உண்மையிலே தீவிரமாக களம் இறங்கினால் எளிதாக வெற்றி அடைந்துவிட முடியும் என்பதுதான் நிலைமை. இனி ஒட்டுமொத்த அமைச்சர் பட்டாளமும் உள்ளே இறங்குவதும், பணம் கொட்டப்படுவதும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக மாறக்கூடும்.

அதேபோன்று நாங்குநேரி விவகாரத்திலும் அ.தி.மு.க. எக்கச்சக்க குஷியில் இருக்கிறது. ஏனென்றால் ரூபி மனோகரனை வேட்பாளராகப் போட்டதில் காங்கிரஸ் கட்சியில் யாருக்கும் திருப்தி இல்லை. ஏனென்றால், ‘என்னுடைய குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிட மாட்டார்கள்’ என்று அறிவித்து இருந்தார் வசந்தகுமார்.

இந்தத் தேர்தல் வசந்தகுமாரின் வெட்டி ஈகோவினால் உருவான தேர்தல் என்ற எரிச்சல் மக்களிடம் இருக்கும்போது, அடுத்தகட்டமாக அவரது சம்பந்தியான ரூபி மனோகரனையே மீண்டும் வேட்பாளராக நிறுத்தியிருப்பது காங்கிரஸ் தொண்டர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாங்குநேரி தொகுதி முழுக்க முழுக்க வசந்தகுமாருக்கும் அவரது குடும்பத்துக்கும் எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதுதான் மக்களின் கேள்வியும். இந்த அதிருப்தியும் எடப்பாடியாருக்கு மிகுந்த சந்தோஷத்தை உருவாக்கியுள்ளதாம்.

எப்படியோ, இந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுகளிலும் ஜெயித்துவிட்டால், அடுத்த உள்ளாட்சி அல்லது சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை கொஞ்சம் அடக்கிவைக்க முடியும் என்று நம்புகிறார் எடப்பாடி.

அப்படித்தான் நடக்கப் போகிறதா..?