உதயநிதி பாணியில் விஜயபிரபாகரனுக்கு பதவி..? தே.மு.தி.க. செப்டம்பர் விழா

ஆண்டுதோறும் தே.மு.தி.க.வில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று செப்டம்பர் 15 அன்று கொண்டாடப்படும் விஜயகாந்த் பிறந்த நாள் விழா. அந்த விழாவில் விஜயபிரபாகரனுக்கு பட்டாபிஷேகம் நடத்த இருப்பதாக தகவல்.


தி.மு.க.வில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்துவிட்டார்கள். அதனால், அவர் தமிழகம் முழுவதும் சிறப்பாக கட்சிப் பணி செய்ய முடிகிறது. அந்த வகையில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனுக்கும் கட்சிப் பதவி கொடுப்பதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 15ஆம் தேதி திருப்பூரில், விஜயகாந்த் பிறந்தநாள் விழா, தே.மு.தி.க. கட்சியின் பதினைந்தாம் ஆண்டு துவக்க நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. 

விஜயகாந்த் உடல்நிலை இன்னமும் சீரடையவில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் முழுமையாக குணம் அடைவது சிரமம் என்றே சொல்லப்படுகிறது. அதனாலே, அவர் மகனை களம் இறக்க கட்சி முடிவு செய்துள்ளது.

இந்த விழாவில் விஜயகாந்த் கலந்துகொண்டு புதிய பதவியை விஜயபிரபாகரனுக்கு வழங்குவார் என்று தெரியவந்துள்ளது. அது நிச்சயம் உதயநிதிக்கு கொடுக்கப்பட்டிருப்பதைவிட பெரிய பதவியாக இருக்குமாம்.