எங்க அப்பா உடம்புக்கு..! மேடையில் அனைவர் முன்னிலையிலும் கண்ணீர் விட்டு கதறிய குட்டி கேப்டன்!

மேடையில் ஏறினாலே சவுன்டு விடுவதுதான் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனின் வழக்கம். எங்கப்பா பத்து ஸ்டாலினுக்கு சமம், இருபது ஜெயலலிதாவுக்கு சமம் என்றெல்லாம் ஏகமாய் பேசியதால், கடந்த தேர்தலில் அவரை கொஞ்சம் ஒதுக்கியே வைத்திருந்தார்கள்.


இந்த நிலையில், விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு மேடை ஏறினார் விஜயபிரபாகரன்.

அப்போது விஜயகாந்தின் உடல்நிலை குறித்துப் பேசும்போது திடீரென கண்ணீர்விட்டு கலங்கி அழத் தொடங்கினார். எங்கப்பா உடல் நல்லா இருக்குது, நல்லா தேறி வந்துட்டார், ஆனா, இப்பவும் அவரைப் பத்தி எல்லோரும் தப்புத்தப்பா பேசுறாங்க, தப்புத்தப்பா சொல்றாங்க என்று மீடியா, பத்திரிகைகளைத் திட்டினார்.

அவர் உடல் நலம் தேறிவிட்டார் என்று சொன்னால் நம்ப மறுக்கிறார்கள் என்று மேடையில் பேசும்போதே கண்ணீர் விட்டு அழத்தொடங்கினார். அழாதீங்க என்று சொல்லச்சொல்ல அவருக்குக் கண்ணீர் வழிந்தது. 

அதன்பிறகு ஒருவழியாக கண்ணீரைத் துடைத்து சமாதானம் ஆனார். இது ஆனந்தக் கண்ணீர். இனிமே பாருங்க. கேப்டன் எப்படி வருவாருன்னு என்று வழக்கம்போல் சவுண்ட் விட்டு கூட்டத்தை நிறைவு செய்தார். விஜயகாந்த் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் அத்தனை பத்திரிகையாளர்களும் விரும்புகிறார்கள், அவர் அப்படி இல்லை என்பதுதான் வருத்தமே..!