ஓ.பி.எஸ்., ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் அன்பு பதிவுகள்! விஜயகாந்த் விரைந்து குணமடையவேண்டும்..!

வழக்கமான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருந்ததாகவும், இப்போது அதில் இருந்து மீண்டுவிட்டார் என்றும் தே.மு.தி.க. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இந்த நிலையில், விஜயகாந்த் விரைந்து குணமடைய வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பதிவு வெளியிட்டுள்ளனர். 

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ட்விட்டரில், ‘உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தே.மு.தி.க. தலைவர் அன்புச் சகோதரர் விஜயகாந்த், விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். 

அதேபோன்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ‘தே.மு.தி.க. தலைவரும் அருமை நண்பருமான திரு. விஜயகாந்த் அவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்தேன். அவர் விரைவில் முழுநலம் பெற வேண்டும் என்ற எனது பெருவிருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் எனவும் விழைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல அரசியல் தலைவர்களும், சினிமா கலைஞர்களும் தங்கள் வாழ்த்துகக்ளை தெரிவித்துவருகின்றனர்.