விஜயகாந்த் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். நிர்வாகிகள் உற்சாகம்.

தே.மு.தி.க. கட்சியின் 16ம் ஆண்டு துவக்க விழா இன்று கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


இந்த விழாவில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களும், கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் கலந்துகொண்டனர்.

தலைமை கழகத்தில் கொடியேற்றி வைத்து நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் விஜயகாந்த் இனிப்புகள் வழங்கினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு பொதுவெளிக்கு வந்த விஜயகாந்த், கொடியேற்றி வைத்ததைக் கண்டு நிர்வாகிகள் உற்சாகம் அடைந்தனர்

விழாவில் விஜயகாந்த் ஒருசில வார்த்தைகளாவது பேசுவார் என்று ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால், பிரேமலதா மட்டும் ஒருசில வார்த்தைகள் பேசிவிட்டு கூட்டத்தைக் கலைத்துவிட்டார்.