அமைச்சர் விஜயபாஸ்கர் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்த ஊக்குவிப்பது ஏன்? ரகசியம் உடைக்கும் பத்திரிகையாளர்

எல்லோரும் கண்டிப்பாக டெஸ்ட் எடுத்தே ஆகவேண்டும் என்று விஜயபாஸ்கர் சொல்லியிருப்பதை கேள்வி கேட்டுள்ளார் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன். இத்தனை கால தாமதமாக இதனை அறிவிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்புகிறார்.


இப்போது, தனியார் மருத்துவமனைகள் கொரோனா டெஸ்டுக்கு ரூ 4,500 என்று இருந்ததை 3,000 ரூபாயாக நிர்ணயிக்க சொல்லிட்டாராம் விஜயபாஸ்கர். அதில் 2,500 ரூபாயை அரசு தந்துவிடுமாம். பரிசோதனைக்கு பணத்தை குறைக்க சொன்னவர், டிரிட்மெண்டுக்கு பல லட்சங்கள் கேட்டு அடிக்கிற கொள்ளையை பற்றி மூச்சுவிடவில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். 

கடந்த இரண்டு மதங்களாக இந்த தேசத்திற்கும், மக்களுக்கும் முழுக்க,முழுக்க நம்பிக்கை அளித்தவர்கள் அரசு மருத்துவமனைகளும், அதன் மருத்துவர்களும், செவிலியர்களும்,சுகாதாரப் பணியாளர்களும்தான். இது தவிர, சித்த மருத்துவர்கள்,அக்குபஞ்சர் மருத்துவர்கள்,ஹோமியோபதி மருத்துவர்கள், இயற்கை மருத்துவர்களில் சிலர் இயல்பாக டிரீட்மெண்ட் தந்ததைக் காணமுடிந்தது.

ஆனால், கொரோனா தொடங்கிய காலகட்டத்துல துண்டக் காணோம், துணியக் காணோம் என்று தங்கள் மருத்துவமனைகள், கிளினிக்குகளையெல்லாம் பூட்டிவிட்டு ஓடி ஒளிந்த இந்த அலோபதி வியாபார வீராதி வீரர்கள், இப்போது, ’‘அட,இது ஒன்னுமில்ல, சப்ப மேட்டர் தான்‘ என்பதை உறுதிபடுத்திக் கொண்டு, ’’கொரோனாவிற்கு டிரீட்மெண்ட் பண்றோம்’’ என்ற பெயரில் அப்பட்டமான பகல்கொள்ளையடிக்க இறங்கிவிட்டனர்.

’’முதல் கட்டமாக மூன்று லட்சம், அடுத்தடுத்து பல்லாயிரம்!’’ என்கிறது ஒரு மருத்துவமனை! முதல் கட்டம் பத்து லட்சம்! அடுத்தடுத்து இன்னும் சில லட்சம் என்கிறது மற்றொரு மருத்துவமனை! ஆளாளுக்கு வித்தியாசப்படுகிறது, ஏகப்பட்ட கெடுபிடி வசூல்!

அதுவும் என்ன சிகிச்சை?,என்ன மருந்து? என்பதே உறுதிபடாத ஒரு நோய்க்கு சிகிச்சை பார்க்கிறது இவங்களுக்கெல்லாம் ஒரு ஜாக்பாட் மாதிரிதான்! எதையெதையோ செய்ததாகவும்,கொடுத்ததாகவும் பணம் பறிக்க பெரிய வாய்ப்பாயிடுச்சு! வெறும் 200 ரூபாயில கொரானா டெஸ்ட் பார்க்கும் கருவியை நம்ம சி.எஸ்.ஐ.ஆர் கண்டுபிடிச்சு கொடுத்திருக்கு!

பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்வது போல ஒரு மணி நேரத்தில் ரிசல்ட் சொல்லிவிடும் கருவியெல்லாம் வந்துவிட்டது. சீனாவின் வூகானில் ஒரு நாளைக்கு பத்து லட்சம் முதல் பதினான்கு லட்சம் பேருக்கு கொரானா டெஸ்ட் அரசாங்கம் பார்த்தது! அது போல இங்கேயும் சாத்தியம்! அதுவும் ஒவ்வொரு மாநிலத்திலுமே சாத்தியம் தான்! இது ஒன்னும் சிரமம் இல்லை!

 ஆனால், நடக்காது! ’’எல்லா துயரங்களிலும், அழிவுகளிலும் அள்ளமட்டும் அள்ளிக் கொள்ளணும், ஆதாயம் தேடணும்’’ என்று நினைக்கும் ஆட்சியாளர்களும், வியாபாரிகளும் நிறைந்த தேசம் இது!

இன்றைக்கு ரோட்டில் நடந்து கொண்டுள்ள ஒரு நூறுபேரை நிறுத்தி டெஸ்ட் செய்தால்,அதில் கண்டிப்பாக எட்டு முதல் பத்து பேருக்கு கொரானா இருப்பதாக டெஸ்ட் சொல்லும். இதை எப்படி சொல்கிறேன் என்றால், தமிழக அரசு தினசரி சுமார் 12,000 பேருக்கு டெஸ்ட் எடுத்து, அதில் 800 முதல் 900 பேருக்கு இருப்பதாக சொல்வதை வைத்து சொல்கிறேன்.

ஆக, டெஸ்ட் எடுக்காதவரைக்கும் ஒருவர் நல்லா ஆரோக்கியமாகக் கூட இருக்கலாம்! டெஸ்டுல அவருக்கு கொரானா என்று சொல்லிய அடுத்த நிமிடமே, அவர் திகிலில் பாதிபலம் இழந்துடுவார். அப்புறம்,இவங்க கொடுக்கிற மாத்திரை, மருந்துகள்..’ கோரண்டைன்’ அப்படி,இப்படின்னு காட்ற சீன்ல மீதி பலமெல்லாம் அப்பீட்டாயிடும்! தேவைதானா?

இது வரை கொரானா டெஸ்ட் எடுக்காமல் இருந்தால், அது உத்தமம். அப்படியே எடுக்க நேர்ந்தால்,அதை அரசு மருத்துவமனையில் எடுப்பது உத்தமம். எடுத்த பின்பு கொரானா என்று தெரிய வந்தால் பதட்டபடாமல், என் வீட்டிலேயே இருந்து கொள்கிறேன் என்று கூறிவிடுவது அதைவிட உத்தமம்!

நான் சொல்வது எளிய மக்களுக்காக! இயற்கை வாழ்வியலிலும்,பாரம்பரிய உணவிலும் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே. ஊரை அடிச்சு உலையில் போட்டு சம்பாதித்த கொழுத்த பணக்காரர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று கொட்டிக் கொடுக்கட்டும்! உண்மையாக உழைத்து வாழ விருப்பமுள்ளவர்கள் விழித்துக் கொள்ளட்டும் என்று பதிவு போட்டுள்ளார்.