என் அப்பா 1000 ஸ்டாலினுக்கு சமம்! திமுகவை தெறிக்க விட்ட கேப்டன் மகன்!

தனது தந்தை விஜயகாந்த் எதிர்கட்சி தலைவரான ஸ்டாலினை போல் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவர் என்று விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.


தேமுதிக கட்சி அறிமுகம் செய்யப்பட்டதன் ஆண்டு விழா பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

 

தேமுதிக ஓய்ந்து விட்டது என்று சொல்கிறவர்கள் கண் தெரியாதவர்கள் என்று நினைக்கிறேன். நான் இங்கு பிறந்து வளர்ந்தவன். இங்கிருக்கக் கூடிய அனைத்து பகுதிகளுக்கும் நான் சென்று வந்துள்ளேன்

 

என்னை விஜயகாந்த் பையன் என்று பார்க்ககாதீர்கள் உங்களின் சகோதரனாக பாருங்கள். உங்களின் நணபன் நான்.என் அப்பா அடிக்கடி சொல்வார். பணத்தில் உயர்ந்தவரை விட மனதில் உயர்ந்தவரே சிறந்தவர் என்று அடிக்கடி கூறுவார்.  

 

அது போல் தான் நானும் நடந்து கொள்கிறேன். சமூக ஊடகங்கள் எல்லாம் சும்மா. அதை நம்ப வேண்டாம். தலைவர் நலமுடன் உள்ளார் நான் தினமும் அவருடன் பேசுகிறேன் 

 

இன்று நிலநடுக்கம் என்றார்கள். இல்லை உண்மையில் விஜயகாந்த் விமான நிலையத்தில் வந்து இறங்குவார்.  அங்கு வந்து பாருங்கள் அவரின் வருகையின் போது ஏற்படும் அதிர்வில் தான் உண்மையான நில நடுக்கம் ஏற்படும்.

 

என்னை பிரபாகரன் என்று அழைக்கிறீர்கள் அதன் பெருமை நான் நிலை நாட்டுவேன். இங்கிருக்கக்கூடிய ஆண்கள் அனைவரும் விஜயகாந்தாகவும்,  பெண்கள் அனைவரையும் பிரேமலதாவாகவும்  பார்க்கிறேன்.

 

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மக்கள் மீது கோபத்தை காட்டுகிறார். என் அப்பாவும் கோபப்படுவார். ஆனால் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும். என் அப்பா எப்போதும் மக்கள் மீது கோபப்பட்டது இல்லை.

 

ஆம் தப்பு நடந்தால் தட்டி கேட்க தான் செய்வோம். என் அப்பா அப்படி தான் கேட்டார். ஜெயலலிதாவை அம்மா என்று அழைக்கச் சொன்னார்கள்.

 

ஆனால் ஜெயலலிதாவை அம்மா என்று சொல்லாமல் கூட்டணியே கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தார். எதிர்கட்சி தலைவர் பதவியையும் என் அப்பா பெரிதாக கருதவில்லை. 

 

என்னை பொதுக்கூட்டத்தில் அப்படி  பேசுங்கள் இப்படி பேசுங்கள் என்கிறார்கள். நான் ரோபா இல்லை எனக்கு என்ன வருமோ பேசுகிறேன். நான் கேப்டன் இல்லை. விஜயபிரபாகரன் தான்.

 

உடல் நிலை சரியில்லாத நிலையிலும் கேப்டன் 100 கலைஞருக்கு சமம் 100 ஜெயலலிதாவிற்கு சமம். 80சீட்டு வைத்திருந்தாலும் நீங்கள் ராஜா இல்லை கூஜா தான். உடல் நிலை சரியில்லாத கேப்டன் 1000ஸ்டாலினுக்கு சமம்.

 

கலைஞர் இல்லாம திமுகவிற்கும் ஜெயலலிதா இல்லாமல் அதிமுகவிற்கும் இது முதல் தேர்தல். கேப்டன் வருவார் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வார். நாடாளுமன்ற தேர்தலில் வென்று கட்சியை பற்றி தப்பாக பேசியவர்களின் மூக்கை அறுக்கிறோம்.

 

காசு கொடுத்தால் வாங்கிகோண்டு தேமுதிகவிற்கு வாக்களியுங்கள். கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் பரவாயில்லை ஓட்டை எங்களுக்கு போடுங்கள். நம் வேட்பாளர்கள் உங்களுக்கு நல்லது செய்யவில்லை என்றால் என்னை கேளுங்கள்.

 

கேப்டனை சமூக வலைதளங்களில் எப்படியெல்லாம் சித்தரித்தார்கள். ஆனால் இப்போது கம் பேக் என்கிறார்கள்.நமக்கு இரண்டரை சதவீத வாக்கு தான் என்கிறார்கள். வருகின்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் நம் வாக்கு சதவீதம் வரும்.

 

தேமுதிக எந்த கூட்டணிக்கு செல்கிறதோ? அந்த கூட்டணி தான் வெற்றி பெறும்.  எல்லோரும் கூட்டணிக்கு மறைமுகமாக காலில் விழுந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தைரியமாக இருக்கிறோம்.     

இவ்வாறு விஜயபிரபாகரன் பேசினார்.