போலிகளை கண்டு ஏமாறாதீர்! பிகில் படவிழாவில் விஜய் கூறிய கதையின் ஒரிஜினல் ஓனர் இந்த பெண் தான்..!

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டி கதை ஏற்கனவே மேடையில் பிரபல பெண் பேச்சாளர் பேசியதை காப்பி அடித்து பேசி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.


ஏற்கனவே விஜய் நடிக்கும் திரைப்படங்களில் உள்ள கதை மற்றொருவரின் கதையில் இருந்து தழுவி எடுக்கப்பட்டதாக பிரச்சனைகள் அவ்வப்போது எழும் நிலையில் தற்போது அவர் மேடையில் பேசுவது கூட காப்பி அடித்துத்தான் என்ற புது சர்ச்சை கிளம்பியுள்ளது. 

ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே பிகில் சினிமாவின் இசை வெளியீட்டு விழா தாம்பரம் அருகே ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

விழாவில் விஜய் பேசிய அரசியல் கருத்துக்கள் வைரலானது. விழாவில் நடிகர் விஜய் குட்டி கதை ஒன்றை கூறினார். பூக்கடையில் வேலை பார்க்கும் சிறுவனுக்கு பட்டாசு கடையில் வேலை தரக்கூடாது. பழக்க தோஷத்தில் அந்த சிறுவன் பட்டாசுகள் மீது 5 நிமிடத்திற்கு ஒரு முறை தண்ணீர் தெளிப்பான். அதனால் வியாபாரமே ஓடாது. யாருக்கு எந்த இடத்தை கொடுக்க வேண்டுமோ, அந்த இடத்தை கொடுக்க வேண்டும், என்று நடிகர் விஜய் தமிழக அரசியலை மறைமுகமாக விமர்சித்து பேசினார்.

இந்நிலையில் இந்த பேச்சு ஏற்கனவே பிரபல பெண் மேடை பேச்சாளர் ஒருவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இரண்டிலும் ஒரே கதையை இரண்டு பேரும் சொல்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. அதேபோல் ''இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து'' என்று திருக்குறளை விஜயும் தனது பேச்சில் குறிப்பிட்டு உள்ளார்.

அந்த பெண் மேடை பேச்சாளர் பேசியதை மாற்றி மாற்றி விஜய் பேசி இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிரபல படங்களின் கதைகளை கொஞ்சமாக மாற்றி இயக்குனர் அட்லி படம் எடுக்கிறார் என்று புகார் வரும் நிலையில் தற்போது நடிகர் விஜயின் பேச்சும் அதேபோல் சர்ச்சையில் சிக்கி உள்ளது.