இரண்டு பேருக்கு விஜய் ஸ்பெஷல் வாழ்த்து

இது என்ன கணக்குன்னு தெரியுதா..?


தமிழகத்தில் நாற்பது தொகுதிகளையும் வென்று தி.மு.க. மகத்தான சாதனை புரிந்திருக்கிறது. மத்தியில் தனி மெஜாரிட்டி இல்லையென்றாலும் மீண்டும் ஆட்சியில் அமர்கிறார் பிரதமர் மோடி. ஆனால், இந்த தேர்தலில் இரண்டு பேருக்கு மட்டும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் நடிகர் விஜய்.

தமிழக வெற்றிக் கழகத்தை இது வரையிலும் அறிக்கை மூலமாக மட்டுமே நடத்திவரும் நடிகர் விஜய் இன்று வெளியிட்டிருக்கும் அடுத்த அறிக்கையில், ‘’நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.’’ என்று கூறியிருக்கிறார்.

இந்த தேர்தலில் விஜய் ரசிகர்கள் வாக்குகள் சீமானுக்கு விழுந்த காரணத்தாலே, இத்தனை பெரிய சதவிகிதம் கிடைத்திருக்கிறது என்று அவரது ரசிகர்கள் பேசி வருகிறார்கள். அதேபோல் சீமானும், ‘தம்பி வரட்டும், சேர்ந்தே பயணிப்போம்’ என்று கூறிவருகிறார்.

சீமான் மட்டுமின்றி திருமாவளவனும் தன்னுடன் சேர்ந்துகொண்டால் 2026 ஆட்டம் சூடு பிடிக்கும் என்று விஜய் கருதுகிறாராம். அதனாலே இந்த இரண்டு பேருக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு என்கிறார்கள்.