மேடையில் பலர் முன்னிலையில் நடிகரின் கூச்சத்தை போக்கிய நடிகை! எப்டி தெரியுமா?

தமிழ் சினிமாவின் பிரபலமான இசை அமைப்பாளர் மற்றும் ஹீரோவான விஜய் ஆன்டனி, மேடையில் நடனம் ஆடி ரசிகர்களை அசத்தினார்.


தமிழ் சினிமாவின் பிரபலமான இசை அமைப்பாளர் மற்றும் ஹீரோவான விஜய் ஆன்டனி, மேடையில் நடனம் ஆடி ரசிகர்களை அசத்தினார். தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி பின்பு ஹீரோவாக வளம் வருபவர் தான் நடிகர் விஜய் ஆன்டனி.

இவர் பொதுவாகவே மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவர்.  யாரிடமும் தேவைக்கு அதிகமாக பேச மாட்டார். இவர் மற்றும் அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "கொலைகாரன்".

இது ஒரு கிரைம் த்ரில்லர் திரைப்படம். இந்த திரைப்படம் ஜூன் 7 (இன்று) திரை அரங்கங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.  நேற்றைய தினம் ஹைதராபாத்தில் இந்த திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் விழா நடைபெற்றது.

இதில் விஜய் ஆன்டனி, கதாநாயகி அமிஷா நர்வல் ஆகியோர்  கலந்துகொண்டனர். அமிஷா நர்வல் இந்த திரைப்படம் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொலைகாரன் திரைப்படம் தெலுங்கில் "கில்லர்" என்ற பெயரில் வெளியாகிறது.  கில்லர் படத்தை ஹைதராபாத்தில் விளம்பரம் செய்வதற்கு தான் படக் குழுவினர் அங்குசென்றனர்.  அப்போது நடிகை அமிஷா நர்வல் மேடையில் ஏறி பேச ஆரம்பித்தார். 

பின்னர் அவரிடம் நடனம் ஆடுமாறு அங்கிருந்த பலரும் கேட்க,  அப்போது அமிஷா நடிகர் விஜய் ஆன்டனியை தன்னோடு ஆட வரும்மாறு அழைத்தார். முதலில் ஆட கூச்சப்பட்டு தயங்கிய விஜய் ஆன்டனி, பின்பு படத்தில் இடம் பெரும் அழகான மெலடி பாடல் ஒண்டிற்க்கு அற்புதமாக நடனம் ஆடினார்.  

இவர்கள் இருவரும் இணைந்து நடம் ஆடிய அந்த  வீடியோ தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.