சாலை ஓரத்தில் அமர்ந்து விம்மி விம்மி அழுத நிர்மலா! அதிர்ச்சி காரணம்!

வேலூரில் சாலையில் நின்று கொண்டிருந்த பெண்ணை திசைதிருப்பி அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.


வேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மலா. இவர் அருகில் உள்ள கனரா வங்கியிலிருந்து வெளியே வந்துள்ளார் அப்போது அவரை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரிடம் இருந்த சுமார் 40,000 ரொக்கப்பணம் மற்றும் 35 பவுன் நகைகளை மர்மமான முறையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிர்மலா தனது இருசக்கர வாகனத்தின் அருகே வந்த போது மர்ம நபர் ஒருவர் 20 ரூபாய் நோட்டை கீழே போட்டுவிட்டு உங்கள் பணம் கீழே கிடைக்கிறது என கூறியுள்ளார்.  

இதையடுத்து நிர்மலா பணத்தை எடுக்க கீழே குனிந்துள்ளார் இந்நிலையில் மர்மமான முறையில் அவரிடம் இருந்த கைப்பை மற்றும் 35 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த நிர்மலம் கூச்சலிட்டுள்ளார்.

இந்நிலையில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் இந்த நிலையில் அவர்களைத் பின்தொடர முடியாமல் போனது பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் அதே இடத்தில் கதறி அழுதுள்ளார்.பின்னர் இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொள்ளையர்களின் அடையாளம் மற்றும் அவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.