காடுவெட்டி குரு மருத்துவ கொலை செய்யப்பட்டுள்ளார்! ராமதாஸ் மீது வேல்முருகன் பகீர் புகார்!

வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மருத்துவ கொலை செய்யப்பட்டுள்ளதாக வேல்முருகன் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.


மோடி சொல்வதை தோப்புக்கரணம் போட்டுக்கொண்டு தமிழக அரசு கேட்கிறது, நீட்டை கொண்டு வந்து பிற்படுத்தப்பட்ட எழை மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது, 7பேர் விடுதலை உள்ளிட்டவற்றில் அரசியல் செய்கிறார்கள். அதிமுக அம்மா பேரவை கயவன் பாலியல் வன்முறை செய்துள்ளான். 

அவர்களை கைது செய்யும் போது ராஜ மரியாதையோடு கைது செய்கிறார்கள். நான் போராட்டத்தில் ஈட்டுபட்டதற்கு தண்ணீர் கூட என்னை கைது செய்தார்கள், ஐ.சி.யு விலிருந்த என்னை கூண்டு வண்டியில்.

எனக்கு கொடுக்கப்பட்ட உணவில் என்ன கலந்தார்களோ தெரியவில்லை நான் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன். இந்த அளவிற்கு நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்னால் பேசக்கூட முடியவில்லை தன்னம்பிக்கை அடிப்படையில் பேசுகிறேன்.அந்த அளவிற்கு கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் எனக்கு எந்த கேட்ட பழக்கமும் இல்லை எப்படி இது வந்தது.

மத்திய அரசு துறையில் வட இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு தமிழர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். ஒரு கட்சி தலைவர் கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும் அதிமுக உடன் கூட்டணி இல்லை என்று கூறினார் எட்டு வழிச்சலைக்கு எதிராக வழக்கு போட்டது அன்புமணி தான்

நான் ஸ்டாலின் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்க வந்துள்ளேன்.மோடி ஆட்சியினை வீட்டுக்கு அனுப்ப வேமண்டுமென்பதே ஒட்டுமொத்த மக்களின் எண்ணமாக இருக்கிறது. ராமதாஸ் பேசுனது அனைத்து ஊடகங்களிடமும் யூடியூப்பிலும் உள்ளது. வன்னிய மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார்கள்.

திமுக ஆட்சியில் தான் இட ஒதுக்கீடு வன்னியர் உள்ளிட்ட பல்வேறு சாதியினருக்கு கிடைத்தது. நான் மட்டும் தான் வன்னியர் தலைவர் என ராமதாஸ் சொல்வது தவறு