காதலிக்கும் போதே 2 ஆண்களுடன் முறையற்ற பழக்கம்? வேலூர் நிவேதா கொலையில் பகீர் வாக்குமூலம்!

வேலூர் அருகே அழுகிய நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. காதலனின் வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்கள் சிக்கியது.


வேலூரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் நிவேதா. 17 வயதான இவர் தனியார் மருத்துவமனையின் கேண்டினில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி மாலையில் இருந்து நிவேதாவை காணவில்லை என பெற்றோர்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் நிவேதாவை தேடிவந்த போலீசார் 18ஆம் தேதி கல்குவாரி பகுதியில் சடலமாக மீட்டனர்.  

நிவேதாவை யாரேனும் கொலை செய்தனரா? இல்லை, தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்த போது நிவேதாவின் செல்போனில் கடைசியாக பிரகாஷ் என்ற ஆட்டோ ஓட்டுனருக்கு கால் சென்றுள்ளது. இதனை வைத்து ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்த போலீசார் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துக்கொண்டனர்.  

வழக்கமாக பிரகாஷ் ஆட்டோவில் நிவேதா மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது. இரண்டு மாதங்களாக பழகி காதலித்து வந்துள்ளனர்.  

இதற்கிடையில் நிவேதா பிரகாஷை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி இருக்கிறார். நிவேதாவிற்கு இன்னும் சில ஆண்களுடன் பழக்கம் இருந்ததால், பிரகாஷ் இதனை மறுத்திருக்கிறார்.  

இறுதியாக கல்குவாரி அருகே சென்ற நிவேதா, பிரகாஷுக்கு போன் செய்து திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி இருக்கிறார். கல்குவாரிக்கு விரைந்து வந்த பிரகாஷ், தடுத்துநிறுத்த முயற்சித்துள்ளார்.  

வாக்குவாதம் உச்சகட்டத்தை அடைந்த போது, ஆத்திரமடைந்த பிரகாஷ் நிவேதாவை கீழே தள்ளி இருக்கிறார். இதனால் நிவேதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் செல்போனை பறித்து அருகில் இருந்த குட்டையில் வீசிவிட்டு பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் இருவரும் தப்பி ஓடுயிருக்கின்றனர்.  

போலீஸ் வாக்குமூலத்தில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.