வேலூரில் பரபரப்பான வாக்குப்பதிவு! பெண்கள் கூட்டம் குறைவு!

அனுமதி இல்லாமல் கூட்டம் போட்டதாக ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதும்,


மீண்டும் வேலூர் தேர்தல் நிறுத்தப்படுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அப்படியெதுவும் நடந்துவிடாமல் இன்று அதிகாலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

வேலூரில் ஆண்கள்- 7,01,351 பேரும், பெண்கள்- 7,31,099 பேரும், 3-ஆம் பாலினம் 105 பேரும் உள்ளனர். வாக்குப்பதிவுக்கு 3,732 மின்னணு எந்திரங்கள், 1,886 கட்டுப்பாட்டு கருவிகளும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 1988 விவிபாட் கருவிகளும் பயன்பாட்டில் உள்ளன. வேலூர் தொகுதியில் 690 இடங்களில் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவை முன்னிட்டு வேலூர் தொகுதி முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பதற்றமானவை என கருதப்படும் 133 வாக்குச்சாவடியில் துணை ராணுவம், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எந்திரங்கள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, ஆகஸ்ட் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இன்று அதிக வெயில் இல்லை என்றாலும், பகல் பொழுதில் பெண்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. மதியம் பெண்கள் வாக்குகள் அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.