சாப்பாட்டில் விஷம்! அடுத்தடுத்து செத்து விழுந்த 7 நாய்கள்! கண்ணீர் விட்டு கதறிய பெண்கள்! அரக்கோணம் பரிதாபம்!

வேலூர் மாவட்டத்தில் செல்லப் பிராணியான ஆதரவற்ற நாய்களுக்கு பெண் ஒருவர் உணவு வழங்குவதை பார்த்து பொறுக்காத சிலர் நாய்களுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து கொன்றுள்ளனர்.


வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் ரீட்டா என்பவர் வசித்து வருகிறார். செல்லப் பிராணிகள் மீது ஆர்வம் கொண்ட ரீட்டா தன்னுடைய வீட்டில் நாய் வளர்த்து வந்தார். அதே சமயம் தெருவில ஆதரவற்று திரியும் நாய்களுக்கும் நாள்தோறும் உணவு வழங்கி வந்தார்.

இதனால் 15க்கும் மேற்பட்ட நாய்கள் எங்கு சுற்றித் திரிந்தாலும் உணவு நேரத்திற்கு சரியாக ரீட்டா வீட்டின் முன் ஆஜராகிவிடும். அவைகளுக்கு உணவு வழங்கி தன்னுடைய நேயத்தை வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைவார் ரீட்டா.  இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் நாய்களுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்ததாக கூறப்படுகிறது.

விஷம் கலந்திருப்பதை அறியாமல் சாப்பிட்ட 10 நாய்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு தகவல் அளிக்க சம்பவ இடத்திற்கு மருத்துவர்கள் விரைந்தனர். உடனடியாக மற்ற நாய்களுக்கு சிகிச்சை அளித்ததால் 3 நாய்கள் உயிர் பிழைத்தன.

அடுத்தடுத்து செல்லமாக வளர்த்து வந்த செல்லப்பிராணிகள் உயிரிழந்ததை பார்த்த ரீட்டா கண்ணீர் விட்டு அழுதார். நாய்களுக்கு விஷம் கலந்த நபரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினர். அரக்கோணம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.