வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டத்தின் போது கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகல்! வேலூர் கலெக்டர் ஆஃபிஸ்! 2 கைக்குழந்தைகள்! இளம் பெண் எடுத்த பகீர் முடிவு! பதறிய மக்கள்!
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பார்த்திபன் முன்னிலையில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் மக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக பதிவு செய்து மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து வந்தனர். மனு கொடுக்க வருபவர்கள் காவல்துறையினரால் சோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
கே.வி குப்பம் கடைசி சீதாராம்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகள் சியாமளா 29, இவர் மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு கூட்டத்தில் தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தை வேறு சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதை கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பல்வேறு முறை கூறியுள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த அவர் தனது 4 குழந்தைகளுடன் தான் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதைப்பார்த்த காவல்துறையினர் உடனடியாக அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தினார். பின்னர் அவரை சமாதானம் செய்து உங்களது மனைவிக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்னரே அவர் தனது மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.