பர்த்டே பம்ப்! பிறந்த நாள் கொண்டாடிய இளைஞனின் உயிர் போன பரிதாபம்! பதற வைக்கும் வீடியோ!

பர்த்டே பம்ப் என்ற பெயரில் இளைஞனை அவனது நண்பர்கள் விளையாட்டாகத் தாக்கிய கலாட்டக்களால் அந்த இளைஞன் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது இது தொடர்பான வீடியோவை வீரேந்திர ஷேவக் வெளியிட்டார்.


தற்போது இளைய சமுதாயத்தினரிடையே பர்த்டே பம்ப் என்ற கலாச்சாரம் பரவி வருகிறது. பிறந்த நாள் காண்பவரை கையையும் காலையும் பிடித்துக் கொண்டு ஊஞ்சல் போல் ஆட்டிக்கொண்டே தங்கள் விருப்பம் போல விளையாட்டாகத் தாக்குகின்றனர். இதனால் காயங்கள் எற்படும் வாய்ப்புகள் கூட அவர்களது அறிவுக்கு எட்டுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு இளைஞனின் பிறந்த நாள் விழாவில் அவனது நண்பர்கள் பிறந்த நாள் பம்ப்பில் ஈடுபட்டனர். மறுநாள் வயிற்று வலியால் பாதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இளைஞனின் கணையம் நண்பர்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்டதே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்தும் இளைஞனை காப்பாற்ற முடியவில்லை. முன்னோர்களின் அர்த்தம் பொதிந்த சடங்குகளை கேலி செய்யும் இளைஞர்கள், இதுபோன்ற உதவாத அர்த்தமற்ற சடங்குகளை உற்சாகம் என்ற பெயரில் மேற்கொள்வதை கைவிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.