வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், சளி, இருமல் நீங்க வேண்டுமா வடி கஞ்சியை எப்படி உபயோகப்படுத்தலாம் என பாருங்க..

தினமும் சாதம் வடித்து சாப்பிடுகிறோம். சாதம் தயாரிப்பதையே மருத்துவ செயல்பாடாக மாற்றி பயன் அடையவும் முடியும்.


  • பெண்களின் வெள்ளைப்படுதல், உடல் சூட்டை நீக்குவதற்கு அரிசி களைந்த இரண்டாவது அல்லது மூன்றாவது கழுநீர் தண்ணீரை குடித்தாலே போதும்.
  • முக்கால் வேக்காட்டில் சாதத்தை எடுத்து அத்துடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல், குடல் வறட்சி, நீர்ச்சுருக்கு நீங்கும்.
  • சோறு வடித்த நீரில் பனங்கற்கண்டு, பனைவெல்லம் சேர்த்து குடித்தால் அகோர பசி நீங்கும். இந்த நீரை தேய்த்துக்குளித்தால் மேனி பளபளப்பாகும்.
  • வடிகஞ்சியுடன் வெந்தயம், சீரகம், சுக்கு, ஓமம் சேர்த்துக் குடித்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், சளி, இருமல் நீங்கிவிடும்