அம்மா இல்லாதப்ப அப்பா நிறைய பொன்னுங்கள கூட்டிட்டு வருவாரு! வனிதா மகள் வெளியிட்ட திடுக் தகவல்!

சென்னை: வனிதா விஜயகுமாரின் மகள், தனது தந்தை பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


பிக் பாஸ் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த வனிதா விஜயகுமாரை, அவரது முன்னாள் கணவர் ஆனந்த்ராஜ் புகாரின்பேரில், தெலுங்கானா போலீசார் நேரில் வந்து கைது செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது, வனிதா விஜயகுமார் தனது மகளை கடத்திவிட்டதாக, அவரது முன்னாள் கணவர் அளித்த புகாரின்பேரில், போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக, பின்னர் தெரியவந்தது. எனினும், வனிதாவை கைது செய்யாமல், அவரிடம் விசாரணை நடத்திவிட்டு போலீசார் சென்றனர். 

இதுபற்றி வனிதாவின் வழக்கறிஞர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ''வனிதாவின் மகள், தற்போது தனது தாயுடன் உள்ளார். அவரது தந்தையின் நண்பர்கள் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, 10 வயது சிறுமிஎன்றும் பாராமல் பாலியல் ரீதியான சில்மிஷங்களை செய்து வந்திருக்கிறார்கள்.

இந்த கொடுமை தாங்காமல், தந்தையை விட்டு விலகி, தாயுடன் அந்த சிறுமி வந்துவிட்டார். இந்த உண்மை தெரியாமல், ஆனந்த்ராஜ் புகாரை வைத்து வனிதாவை போலீசார் கைது செய்ய முயன்றனர்.

ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமியே இதனை போலீசாரிடம் நேரடியாக தெரிவித்ததை தொடர்ந்து, அவர்கள் பிக் பாஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியேறினர்,''  என்று குறிப்பிட்டுள்ளார்.