பிக்பாஸ் 3 வீட்டில் வனிதா விஜயகுமார்! வெட்டு குத்துக்கு கேரண்டி!

பிக்பாஸ் 3 வீட்டிற்குள் நடிகை வனிதா விஜயகுமார் சென்றுள்ளதால் வெட்டு குத்து நிச்சயமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.


பார்க்க பரம சாதுவாக காட்சி அளிப்பவர் நடிகை வனிதா. இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் ஆவார். இதுவரை மூன்று பேரை வனிதா திருமணம் செய்தவர் என்பது கூடுதல் தகவல். இதில் இருவரை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து விவகாரத்து பெற்றதினால் மூன்றாவது நபருடன் திருமணம் செய்யாமலேயே  கணவன் மனைவியாக வாழ்ந்து பின்னர் பிரிந்துள்ளார். மேலும் இவரது மகனை மையமாக வைத்து விஜயகுமாருடன் ஏற்பட்ட மோதல் அனைவரும் அறிந்த ஒன்று.

விமான நிலையத்தில் வைத்து விஜயகுமாரை தாக்கி அவரிடம் இருந்து மகனை பிரித்து இழுத்துச் சென்றதன் மூலம் வனிதா உலகப் புகழ்பெற்றவர். மேலும் தந்தையின் வீட்டை காலி செய்ய முடியாது என்ற விவகாரத்தில் செய்தியாளர் ஒருவரைஅடிக்க நைட்டியுடன் ஓடி மேலும் சர்ச்சையை கிளப்பினார். வனிதா மீது ஏராளமான புகார்கள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளதால் அங்கு இருப்பவர்கள் பீதியில் உள்ளனர். வனிதாவை பார்த்த உடேனேயே இவரா என்று பலரும்அதிர்ச்சி அடைந்ததை காண முடிந்தது. இதனால் வீட்டிற்குள் நிச்சயம் வெட்டுகுத்து நடைபெற வாய்ப்பு உள்ளது என லேசாக சினிமா துறையினர் இடையே கிண்டலடிக்கபடுகிறது.