திருவிழா டான்ஸ்! அபியிடம் மயங்கியது அப்படித்தான்! வினிதா வெளியிட்ட ரகசியம்!

டிக் டாக்கில் அறிமுகமான அபியுடன் சேர்ந்து திருவிழாக்களில் ஆட கணவர் சம்மதிக்காததால்தான் வீட்டை விட்டு வெளியேறியதாக வினிதா புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார். தனக்கும் அபியை போல் திருவிழாக்களில் ஆட ஆசை என்றும் ஆனால் அதற்கு கணவர் தடையாக இருந்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார் வினிதா.


வீட்டில் இருந்த 40 சவரன் நகைகளுடன் டிக் டாக் செயலியில் அறிமுகமான தோழியுடன் மாயமான வினிதா தற்போது போலீசில் ஆஜரானதுடன் தான் ஓடிப்போனதற்கான விளக்கத்தை வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். 

தேவகோட்டையை சேர்ந்த வினிதா, ஆரோக்கிய லியோ இருவரும் தம்பதி. குடும்பத்தை காப்பாற்ற சிங்கப்பூருக்கு கணவர் வேலைக்கு சென்றுவிட்டார். தனிமையில் வாழ்ந்து வந்த வினிதா டிக் டாக் செயலி மிகவும் பிடித்துப் போக அதிலேயே மூழ்கிப் போனார். பின்னர் டிக் டாக் மூலம் திருவாரூரை சேர்ந்த அபி என்பவருடன் அறிமுகம் கிடைத்தது வினிதாவுக்கு.

செப்டம்பர் மாதம் தாயகம் திரும்பிய கணவனுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. வினிதாவின் செல்போனை ஆராய்ந்தபோது அதில் அபியுடன் நெருக்கமான போட்டோக்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த விவகாரத்தை வினிதாவின் குடும்பத்தினர் டிக்டாக் ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளித்தனர். பின்னர் நேற்று தேவக்கோட்டை காவல் நிலையத்தில் வினிதா ஆஜர் ஆகி வீட்டை விட்டு சென்றதற்காக காரணத்தை தெரிவித்துள்ளார்.

திருவிழா ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடும் அபியை டிக்-டாக் மூலமாகத்தான் தெரியும் என்றும் தனக்கும் ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று ஆசை வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் அபியுடன் சேர்ந்து தனக்கும் திருவிழாக்களில் ஆடவேண்டும் என்று தெரிவித்ததை கணவர் மறுத்துவிட்டதாக கூறியுள்ளார் வினிதா.

அபியுடன் பழகக்கூடாது என தன் கணவர் சண்டை போட்டு அடிச்சதாக கூறுகிறார் வினிதா. மேலும் அபி தனக்கு ஒரு நல்ல தோழி என்றும் அதை தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை என்றும் கூறினர்.