வைகோ வீடு திரும்பிட்டாராம்! இனிமேயாவது காஷ்மீர் பற்றி பேசுவாரா?

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வைகோ வீடு திரும்பிவிட்டதாக செய்தி வெளியாகியிருக்கிறது.


இன்னும் சில நாட்கள் மருத்துவர் ஆலோசனைப்படி ஓய்வில் இருப்பாராம். அதன்பிறகு காஷ்மீர் விஷயம் பற்றி பேசுவாரா என்பதுதான் எல்லோரும் எதிர்பார்க்கும் கேள்வி.

அவர் ஓய்வில் இருந்தாலும் சும்மா இருக்கமாட்டார் என்று சொல்லும்படி அறிக்கையை ம.தி.மு.க. வெளியிட்டுள்ளது. ஆம், இதோ அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது. சென்னை வானூர்தி நிலையத்தின் பன்னாட்டு உள்நாட்டு முனையங்களுக்கு வைக்கப்பட்டு இருந்த பேரறிஞர் அண்ணா பெருந்தலைவர் காமராஜர் பெயர்ப் பலகைகளை அகற்றியது உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது.

அதைக் கண்டித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறப் போராட்டம் நடத்தியது. கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். எனவே, அந்தப் பெயர் பலகைகளை மீண்டும் உடனடியாக வைக்கக்கோரி மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு கடிதம் எழுதி உள்ளாராம்.

அப்புறம் என்ன, எல்லாம் சரியாயிடும்ப்பா..