திருச்சியில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் தான் இன்னும் சில வருடங்கள் தான் உயிரோடு இருப்பேன் என்று கூறி வைகோ கதறியது பார்வையாளர்களை அதிர வைத்தது.
இன்னும் சில காலம் தான் உயிரோடு இருப்பேன்! திருச்சியில் கதறிய வைகோ!

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்
முதுகலை, தமிழாய்வுத்துறை மற்றும் இஸ்லாமிய தமிழ்ப்பண்பாட்டு ஆய்வு மையம்; சார்பில்
இஸ்லாமும் தமிழும் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு வைகோ பேசியதாவது:
தோல்வியே நீ என்னை சுட்டு துளைத்ததால்தான்
நான் புல்லாங்குழல் ஆனேன். தோல்வியே நீயே என் பணம். ஏனெனில் அதனை கொண்டு வெற்றியை வாங்கி
விடலாம் அல்லவா. இதனை நான் அரசியலாக சொல்லவில்லை. நான் பல தோல்விகளை கண்டவன்.
நான் ஒரு போராளி. எனக்கு தோல்வியே கிடையாது.
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக, காவிரியை காப்பாற்றுவதற்காக தொடர்ந்து போராடி கொண்டிருப்பேன்.
கரங்களை இழக்கலாம். ஆனால் எங்கள் வாள் உறைக்குள் செல்லாது.
எங்கள் யுத்தம் தொடரும். இந்து,முஸ்லிம்,
கிறிஸ்தவர்கள் சகோதரர்களாக வாழ்வதை தகர்க்க நினைக்கும் சக்தியை தமிழகத்திற்குள்ளே நுழைய
விடமாட்டோம். ஷரியத்தில் கை வைக்க நினைத்தவர்களை
முறியடித்தவர்களில் வைகோவும் ஒருவன்.
நான் இன்னும் சில ஆண்டுகள் தான் உயிரோட
இருக்க போகிறேன். வாழ்கின்ற ஒவ்வொரு நிமிடத்திலேயும் தமிழகத்தின் நலனுக்காக பாடுபடுவேன்.
இவ்வாறு வைகோ கூறிய போது அரங்கில் சலசலப்பு
ஏற்பட்டது.
காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால்
சுட்டு, தீயிட்டு கொளுத்தி, கோட்சே வாழ்க என்று கோஷமிட்ட செயலுக்கு இந்த நாட்டில் இதுவரை
ஒரு கண்டன குரலாவது எழுந்ததா? இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபட்டு உயிரிழந்த காந்தியை
இழிவுபடுத்துகிறார்கள்..
காந்தி குறித்து பேசிய போது உணர்ச்சிவசப்பட்டு
வைகோ கண் கலங்கினார். கண்களை துடைத்துக் கொண்டு வைகோ பேசிய போது அரங்கத்தில் சிறிது
நேரம் பரபரப்பானசூழல் எழுந்தது.
பின்னர் பேசிய வைகோ, திருச்சி திருமண
மண்டபத்தில் தீவிபத்து ஏற்பட்ட போது அதிகளவு இஸ்லாமியர்கள் ஆம்புலன்ஸ்கள் தான் காப்பாற்ற
ஓடி வந்தது. தாயின் காலடியே சொர்க்கம். தந்தையே போற்றத்தக்கவர் என்று மாணவர்கள் வாழ்ந்து,
வெற்றி பெற வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.