23 ஆண்டுகளுக்கு பிறகு எம்பி பதவி! கதறி அழுத வைகோ!

தி.மு.க.வில் இருந்து வெளியேறிய பிறகு, ஒரே ஒரு காலகட்டத்தில் மட்டும்தான் வைகோவின் ஆள் மத்திய மந்திரியாக இருந்திருக்கிறார்.


தி.மு.க.வில் இருந்து வெளியேறிய பிறகு, ஒரே ஒரு காலகட்டத்தில் மட்டும்தான் வைகோவின் ஆள் மத்திய மந்திரியாக இருந்திருக்கிறார். அதையடுத்து முழுக்க முழுக்க வைகோவின் வாழ்க்கையில் தோல்வி, அவமானம், கேவலம், கெட்ட பெயர் போன்றவைதான் இருந்தன. 
இந்த சூழலில்தான் கடந்த தேர்தலில் வைகோவுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட் உறுதி கொடுத்தார் ஸ்டாலின்.

ஆனால், அதற்காக தெருத்தெருவாக பேச வைத்து வேடிக்கை பார்த்தது வேறு விஷயம். ஆனால் சொன்னதுபோல் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்துவிட்டார். அந்த வகையில் இன்று பாசிசத்தின் கைகளில் இந்திய ஒருமைபாடு நசுக்கபடுகிறவேளையில் சமத்துத்துவத்தை சகோதரத்தை சமநீதியை சமூகநீதியை கடித்து குதறும் செயல்பாட்டை எதிர்த்து குரல் கொடுக்க நீண்ட அனுபவமுள்ள வைகோ செல்வது சரியானதொரு தேர்வாகவேபடுகிறது.

வைகோவை நிறைய விமர்சனம் செய்திருக்கிறோம். சரியான பிழையாக கூட சிலநேரம் உரக்க கூறியிருக்கிறோம் .. ஆனாலும் அவரின் நேர்மையும் தன்னலமற்ற சேவையும் கூரிய அறிவு திறமையையும் எப்போதும் குறைவாக மதிப்பிட்டதில்லை இன்றைய சூழலில் வைகோ மிக சரியான சிறப்பான தேர்வு ..

அதன்படி இன்று மதிமுக சார்பில் கழக உயர்நிலைக்குழு ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது. அதில், மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மாநில உறுப்பினராக செல்ல வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அம்புட்டுத்தான், அதுவரை கெத்தாக இருந்த வைகோ கண்கள் கலங்கி அழத் தொடங்கிவிட்டார். என்ன செய்றது? ஒரு பதவிக்கு இத்தனை ஆண்டுகள் காத்துக்கிடந்தா அப்படித்தான்.