முதலில் பேகம்! 2வது நூர்! 3வது தரனூம்! ஒரே வீட்டில் 3 மனைவிகளுடன் குடித்தனம் நடத்தும் ஷெரீப்! எத்தனை குழந்தைகள் தெரியுமா?

உத்தர பிரதேச மாநிலத்தில் பெயர்கள் கூட ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு குழந்தைகள் பெற்ற தந்தை ஒருவர் மேலும் குழந்தைகள் வேண்டும் என மனைவிகளை தொல்லை கொடுத்து வருகிறார்.


சுமார் 6,000 பேர் வாழும் பவுதியன் கலன் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார் முகமது ஷெரிப். இவருக்கு 3 மனைவிகள் மற்றும் 15 குழந்தைகள் உள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா? 

1987ம் வருடம் தன்னுடைய 14வது வயதில் பேகம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட முகமது ஷெரிப் 3 மகன்கள், 5 மகள்களை பெற்றெடுத்தார். பின்னர் 1990ம் ஆண்டு 2வது திருமணம் செய்த நூர் என்ற பெண் மூலம் 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

அப்படியும் அவருக்கு ஆசை அடங்கவில்லை. பின்னர் 2000ம் வருஷம் தரனூம் பேகம் என்ற நேபாள பெண்ணை கரம் பிடித்த முகமது ஷெரிப் அவர் மூலம் ஒரு மகன், ஒரு மகள் பெற்றுக் கொண்டார். 32 வருடத்தில் 15 பிள்ளைகளை ஈன்றெடுத்த முகமது ஷெரிப்புக்கு எல்லா குழந்தைகளின் பெயர்களும் தெரியாது என்பது இன்னொரு அதிர்ச்சியான விஷயம்.

ஆனால் மூத்த மகனின் வயதும் இளைய மகளின் வயதும் மட்டும் அவருக்குத் தெரியும். குடும்பக் கட்டுப்பாடு என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்து வரும் முகமது ஷெரிப் ஒவ்வொரு குழந்தையும் ஆண்டவனின் ஆசீர்வாதமாக கருதுகிறார். ஆனாலும் 3 மனைவிகள், 15 பிள்ளைகள் இடையே இதுவரை சண்டையே வந்ததில்லையாம். சக்களத்தி சண்டை உள்பட.

இது மட்டுமின்றி மேலும் சில குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்புவதாக தெரிவித்த முகமது ஷெரிப்புக்கு யாராவது ஈ.எம்.ஐ.யில் பொருள் வாங்கித் தந்து விட்டு மாதந்தோறும் கட்டச் சொன்னால் அப்போதாவது வறுமை அவரை எட்டி பார்க்கும் பட்சத்தில் குட்டி போடுவதை மன்னிக்கவும் குழந்தை பெற்றெடுப்பதை நிறுத்துவார்.