பால் பாக்கெட்டுகள் திருடிய 2 போலீசாரின் சிசிடிவி பதிவு சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேமரா இருப்பது தெரியாமல் போலீஸ்காரர் செய்த செயல்! வீடியோ வெளியானதால் தெரிய வந்த பகீர் சம்பவம்!
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் இரவு ரோந்து பணியில் இரண்டு போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகாலை அப்பகுதியில் இருக்கும் கடைக்கு பால் பாக்கெட்டுகளை கொண்ட ட்ரேவை, ஒரு வாகனம் வந்து இறக்கி விட்டுச் சென்றது.
அச்சமயம் அந்த பகுதியில் இருந்த அந்த இரண்டு போலீசாரில் ஒருவர் கீழே இறங்கி வந்து இரண்டு பால் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு மீண்டும் வண்டியில் கிளம்பியுள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது பேசு பொருளாகவும் சமூக வலைதளங்களில் உலவி வந்தது.
இதனால் சம்பந்தப்பட்ட இரண்டு போலீசாரை பணியிடை மாற்றம் செய்து காவல்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.