பேஸ்புக் காதல்! அமெரிக்க பெண்ணை உஷார் செய்து மாலை மாற்றிய கடலூர் இளைஞர்!

அமெரிக்க நாட்டின் இளம் பெண் பிரட்டி (வயது 22) இவருடைய தந்தை பல்டன், தாய் பர்டிஷியா தமிழ் கலாசாரத்தை பற்றி ஆராய்ச்சி செய்வதற்தாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்துள்ளனர்.


இந்த நிலையில் பிரட்டி, முகநூலில் தமிழ் கலாசாரம் பற்றிய தகவல் கேட்டிருந்தார், அவருக்கு முக நூல் மூலமாக உதவினார் கடலூர், திட்டக்குடி அருகே உள்ள அகரம்சீகூர் கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் சூரியபிரகாஷ்(வயது 25). இவ்வாறு துவங்கிய நட்பு, பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும்க்கும் பெற்றோரின் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, இதனை தொடர்ந்து பிரட்டி, சூரியபிரகாஷ் நிச்சயதார்த்த நிகழ்ச்சி திட்டக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை நடந்தது. இதில் இருவரும் மோதிரம் மற்றும் மாலை மாற்றிக்கொண்டனர்.

இது குறித்து மணமகள் பிரட்டி கூறுகையில், தமிழ் கலாசாரம், உடை, உணவு, மனிதர்கள் அன்போடு பழகும் விதம்  எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இங்குள்ள ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் தான் சூர்ய பிரகாசை சந்துத்தாக தெரிவித்தார்.