ரஜினி இப்படி எல்லாம் ஆரம்ப காலத்தில் செய்தாரா..? அடேங்கப்பா தகவல்கள்!

ரஜினிக்கு சினிமாவில் ஆரம்ப காலம் முதலே கடும் எதிர்ப்பு இருந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.


ஒரு கட்டத்தில், நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் நடித்துக்கொடுக்கும் நிலையில் இருந்தார். அதனால் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளானார். இதுகுறித்து பத்திரிகையாளர் ஆர்.பி.ராஜநாயகம் எழுதியிருக்கும் பதிவு, அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது ஆகும். ஆம், ரஜினியின் லீலைகள் திரைக்கு வெளியிலும் தொடர்ந்தது. இது குறித்து எழுதினார் ஆர்.பி.ராஜநாயகம். 

மதுரை ஏர்போர்ட்டில் ஒரு சோடா கடைக்காரனை பெல்டை கழட்டி அடித்தது, சென்னையில்“மூக்குத்தி” என்ற பத்திரிக்கை நிருபர் ஜெயமணி மேல் காரை ஏற்ற முயற்சித்தது, “புவனா ஒரு கேள்விக்குறி” படத்தில் அசிஸ்டண்ட் டைரக்டர் வெள்ளை முடி லோக நாதனுடன் கைகலப்பு, ‘நினைத்தாலே இனிக்கும்’ பட டப்பிங்குக்கு அந்த பட அசிஸ்டண்ட்டைரக்டர் கண்மணி சுப்பு (கண்ண தாசன் மகன்)போய் கூப்பிட்டும் வராமல்கே. பாலச்சந்தர் போட்டோவை உடைத்தது எல்லோரும் அறிந்ததுதான்.

அதனால்தான், பாலச்சந்தர் நொந்து போய் அப்போது சொன்னது என்ன தெரியுமா?- ‘ரஜினிகாந்தை அறிமுகம் செய்தது நான் செய்த மிகப் பெரிய தவறு’ என்று சொன்னார். மேலும், ஜர்தா பீடா, குடி, கூத்து, ரவுடித்தனம்... ஆக, அவ்வளவுதான்! ரஜினி பீல்ட் அவுட்! ரஜினி சேப்டர் க்ளோஸ் என்று சொன்னார்கள்.

ஊர் வாயில் விழுந்த பின் ரஜினி சினிமாவில் உச்சத்தை அடைந்தது உலக அதிசயம் என்கிறார். ஆம், ரஜினி ஓர் அதிசயம்தான்.