பிரியாணி விலையில் 50 சதவீதம் தள்ளுபடி என்று நம்பி ஊபர் ஈட்ஸ் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்பவர்கள் இந்த பதிவுக்கு பிறகு உஷாராக இருக்கவும்.
ஊபர் ஈட்ஸ்சில் பிரியானிக்கு 50% தள்ளுபடி ஒரு மோசடி! வாடிக்கையாளர்களே உஷார்!

சென்னையில் தற்போது
அனைவரது செல்போன்களிலும் இருக்க கூடிய மிக முக்கியமான ஆப் ஊபர் ஈட்ஸ். சென்னையில் எந்த
இடத்தில் இருந்தும் நமக்கு விருப்பமான உணவகத்தில் இருந்து விருப்பமான உணவை ஆர்டர் செய்தால்
குறைந்தது 10 நிமிடங்களிலும் அதிகபட்சம் 50 நிமிடங்களிலும் டெலிவரி செய்கிறார்கள்.
இதே போல் ஸ்விக்கி, புட் பாண்டா, ஜொமோட்டோ போன்ற ஆப்களும் மிகவும் பிரபலமாக உள்ளன.
இந்த புட் ஆர்டர்
ஆப்கள் தங்களுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெற வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளி
வீசுகின்றன. அதில் மிக முக்கியமான ஆஃபர் ஆர்டர் செய்யும் பிரியானி விலையில் 50 சதவீதம்
தள்ளுபடி என்பது தான். ஊபர் ஈட்ஸ் ஆப்பை பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த பிரியான விலை
தள்ளுபடி ஆஃபர் பற்றி நன்று தெரிந்திருக்கும். பெரும்பாலானவர்கள் இந்த ஆஃபரில் பிரியானியை
ஆர்டர் செய்து சாப்பிடவும் செய்திருப்போம்.
ஆனால் சாப்பிடும்
போது பலரும் அறியாத ஒரு விஷயம் நாம் சிக்கன் பிரியானி என்று ஆர்டர் செய்தால் பிரியானில்
சிக்கன் பீஸ் மிகச்சிறிய அளவில் இருக்கும். இல்லை என்றால் பிரியானியுடன் கோழியின் கழுத்து
பகுதியை மட்டும் போட்டு கொடுத்துவிடுகிறார்கள். இன்னும் சில ஆர்டர்களிலோ சிக்கன் பிரியானி
என்றால் சிக்கன் பீசில் வெறும் எலும்பு மட்டுமே இருக்கிறது.
ஆனால் நாம் 50 சதவீத விலை தள்ளுபடி வேண்டாம் என்று அதே உணவகத்தில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தால், சிக்கன் பீஸ் வழக்கம் போல் சரியான அளவில் இருக்கிறது. 50 சதவீத விலை தள்ளுபடி என்பதால் வெறும் குஷ்காவை மட்டும் வைத்துவிட்டு பெயருக்கு சிக்கன் என்கிற பெயரில் சில எலும்புதுண்டுகளை வைத்து ஹோட்டல்கள் நமக்கு டெலிவரி செய்துவிடுகின்றன.
இது குறித்து விசாரித்த
போது தான் சமயத்தில் பரபரப்பாக சிக்கன் பிரியானி விற்பனையாகி தீர்ந்துவிடும். வெறும்
குஷ்கா மட்டுமே இருக்கும் இந்த சமயத்தில் இந்த குஷ்காவை விற்றுத் தீர்க்க 50 சதவீத
தள்ளுபடி என்கிற பெயரில் நமக்கு சிக்கன் பீஸ் இல்லாமல் சிக்கன் பிரியானியை அனுப்பிவிடுகிறார்கள்.
மேலும் விற்பனையாகாமல் இருக்கும் உணவுகளையும் ஊபர் ஈட்ஸ் மூலமாக 50 சதவீத தள்ளுபடி
என்று உணவகங்கள் வாடிக்கையாளர்கள் தலையில் கட்டிவிடுகின்றன.
எனவே ஊபர் ஈட்ஸ் உள்ளிட்ட புட் ஆப்கள் மூலம் உணவு ஆர்டர் செய்பவர்கள் ஆஃபர் என்று நம்பி தரமற்றவற்றை பெற்று ஏமாந்துவிட வேண்டாம்.