கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, ! சிவகங்கை தாதா ராஜசேகரை பட்டப்பகலில் சம்பவம்!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, ரவுடி ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


சிவகங்கை மாவட்டம் அல்லூர்பனங்காடியை சேர்ந்த, ராஜசேகர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் 2015ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்று கொண்டு இருந்தார்.

இவர்கள் இருவரும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது திடீரென ஒரு ஆட்டோ குறுக்கிட்டது. அந்த ஆட்டோவில் இருந்து இறங்கிய 6 பேர் கொண்ட மர்மக் கும்பல் ராஜசேகரை நோக்கி வந்தது. இதனால் தாம் கொல்லப்படலாம் என உஷார் ஆன ராஜசேகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நோக்கி ஓடத் தொடங்கினார்.

ஆனால் ராஜசேகரை விரட்டிச் சென்ற அந்த மர்மக் கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. தலையில் அரிவாளால் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராஜசேகர் சிறிது நேரத்தில் துடி துடித்து உயிரிழந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் அங்கிருந்து ஓடி விட்டார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த சிவகங்கை போலீசார் ராஜசேகர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ராஜசேகருக்கு தொடர்புள்ளதாகவும் இதே வழக்குகளில் தொடர்பு உடைய மற்றொரு பிரிவினர்தான் ராஜசேகரை கொன்றிருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். 

பல ஆண்டுகளாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ராஜசேகர் அவரை காட்டிக்கொடுத்த 2 பேரை 2010-ம் ஆண்டு கொலை செய்தது உட்பட 3 கொலை வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளது. மேலும் கந்துவட்டி, கட்டப் பஞ்சாயத்து என ரவுடியாக ராஜசேகர் வலம் வந்துள்ளாத போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது