குடிமகன்கள் ராக்ஸ்! கட்டிப் புரண்டு சண்டை! அடுத்த நிமிடமே கட்டி அணைத்து டான்ஸ்!

இரு குடிகாரர்களின் ரசிக்க வைக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.


டிக் டாக் என்ற செயலியை கேள்விப்படாதோர் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. மிகவும் வினோதமான வீடியோக்கள் இந்த செயலின் மூலம் அனைவரையும் சென்று சேர்வது வழக்கமான ஒன்று தான். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் மது அருந்திவிட்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் குத்தாட்டம் போடுகிறார். அப்படியே அவர் ஆடிக் கொண்டிருக்கையில் கீழே இருந்த அனைவரும் அவரை உற்சாகப்படுத்தி கொண்டு மறுபுறம் தாங்களும் ஆடிக்கொண்டிருந்தனர்.

அப்போது மேடையில் ஆடிக் கொண்டிருந்த நபர் தலைகீழாக சுற்றி கீழே இறங்குவதற்காக ஸ்டைலாக ஒரு நடன அசைவைச் செய்தார். ஆனால் அது தவறி முடிந்துவிட்டது. தலையினால் சுற்றி விழுந்த போது கீழே ஆடிக்கொண்டிருந்த ஒரு குடிமகனின் தலையில் அவரது கால் பட்டு விட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் நடனமாடிய நபரை ஓங்கி அடித்தார்.

ஆனால் குடிகாரன் மனது குழந்தை என்பது போல இதையெல்லாம் பொருட்படுத்தாது அந்த நடன குடிமகன் தொடர்ந்து ஆடிக் கொண்டே இருந்தார். இதை பார்த்த உற்சாகத்தில் தலையில் அடி வாங்கியவரோ அவருடன் சேர்ந்து ஆட தொடங்கிவிட்டார். இந்தக் காட்சி தற்போது இணையதளத்தில் மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்டு பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.