குறை பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்..! எடை மிக மிக குறைவு! மரணத்தின் வாசல் வரை சென்று மீண்ட குழந்தை! எப்படி தெரியுமா?

லண்டன்: உயிருக்குப் போராடிய தம்பியை கட்டிப் பிடித்து காப்பாற்றிய அண்ணனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


பிரிட்டனில் உள்ள நார்த் வேல்ஸ், ரெக்ஸாம் பகுதியை சேர்ந்தவர் ஹன்னா ஜிமுன்யா (28 வயது). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில்,  கடந்த அக்டோபர் மாதம் புதியதாக இரட்டை ஆண் குழந்தைகளை ஹன்னா பெற்றெடுத்தார். அந்த குழந்தைகள் பிரசவ காலத்திற்கு 15 வாரங்கள் முன்பாக, பிறந்ததால், உடல் எடை மிகக் குறைவாகவும், ஊட்டச்சத்து குறைபாடாகவும் இருந்தன. இதையடுத்து, இன்குபேட்டரில் வைத்து குழந்தைகளை மருத்துவர்கள் பராமரித்தனர்.

இவ்விரு குழந்தைகளுக்கும் டிலன், டேனியோல் என பெயரிடப்பட்டது. இதில், மூத்த குழந்தை டிலன் நாளுக்கு நாள் உடல்நலம் தேறவே, இன்குபேட்டரில் இருந்து வெளியே வைக்கப்பட்டான். அதேசமயம், இளைய மகன் டேனியோல் நிலைமை மோசமாக தொடங்கியது. இதையடுத்து சிறுவன் பிழைக்க மாட்டான் என மருத்துவர்கள் கை விரித்துவிட்டனர்.  

வேறு வழியின்றி, கண்ணீருடன் அச்சிறுவனுக்கு பிரியா விடை தர தீர்மானித்தனர். இதன்போது கடைசியாக ஒருமுறை இன்குபேட்டரில் உள்ள சிறுவனை பார்க்க, அவனது உடன்பிறந்த மூத்த சகோதரனை இன்குபேட்டர் உள்ளே வைத்தனர். அச்சிறுவனும், ஒரு 5 நிமிடங்கள் தன்னுடன் ஒட்டிப்பிறந்த சகோதரனை கட்டித் தழுவியபடி இருந்தான். இதன்போது வியத்தகு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆம், உயிருக்குப் போராடிய சிறுவன் டேனியோலின் உடல்நிலை திடீரென முன்னேற்றம் பெற தொடங்கியது. இதைக் கண்டு மருத்துவர்களே ஆச்சரியமடைந்தனர்.  

அண்ணனை பிரித்தால் இதய துடிப்பு மிக பலகீனமாகவும், அண்ணனுடன் சேர்த்து வைத்தால் இதய துடிப்பு வேகமாகவும் இருப்பதை பார்த்து தாய் ஹன்னா பரவசமடைந்தார். இதையடுத்து, 2 சிறுவர்களையும் ஒரே இன்குபேட்டரில் சில நாட்கள் வைத்திருந்து படிப்படியாக இளம் குழந்தையின் உடல்நிலையை மருத்துவர்கள் காப்பாற்றினர். தற்போது இன்குபேட்டரில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு விட்டாலும், இன்னும் சில காலம் மருத்துவ கண்காணிப்பில் சிறுவன் டேனியோல் இருக்க வேண்டியுள்ளது.