பிறக்கும் முன்பே தாயின் வயிற்றுக்குள் சண்டை! வைரலாகும் ட்வின் சகோதரிகளின் சேட்டை!

பிறக்கும் முன்பே, தாயின் கருவில் சண்டையிட்டுக் கொண்ட இரட்டை சகோதரிகளின் வீடியோ வைரலாகி வருகிறது.


சீனாவில்தான் இந்தவீடியோ எடுக்கப்பட்டுள்ளது. தாயின் கருவை ஸ்கேன் செய்து பார்த்தபோது, இரட்டை பெண் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அதைவிட சுவாரஷ்யம் என்னவெனில், அந்த குழந்தைகள் இருவரும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர். இந்த காட்சி, ஸ்கேன் வீடியோவில் அப்படியே துல்லியமாக பதிவானது. 

இது கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட வீடியோ என்றாலும், தற்போது மீண்டும் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. பார்ப்பதற்கு மிக வேடிக்கையாக, அதேசமயம், மிகவும் கவனிக்க வேண்டிய விசயமாகவும் இது உள்ளது. இரட்டை குழந்தைகள் என்றால், அவர்களுக்குள் என்ன மாதிரியான கருத்து வேறுபாடுகள் வரும் என்பதற்கு,  இது உதாரணம் எனவும் ஒரு ஆய்வில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.