நகைகளை விற்றுத் தான் கடன்களை அடைத்துக் கொண்டிருக்கிறேன்..! டிவி நடிகைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! காரணம் இது தான்..!

டெல்லி: பிஎம்சி வங்கி பிரச்னையால் நிதிப் பரிவர்த்தனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, என்று நடிகை நுபுர் ஆலங்கர் வேதனை தெரிவித்துள்ளார்.


பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள்  தங்களது சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு, சமீபத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், தினசரி ஆயிரம் ரூபாய் கூட எடுத்துச் செலவிட முடியாத நிலைக்கு, பலரும் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த திடீர் கட்டுப்பாட்டால் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றி நடிகை நுபுர் ஆலங்கார் வேதனை தெரிவித்துள்ளார்.  

அவர் கூறுகையில், ''நான் மிகப்பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளேன். எனக்கு மற்ற வங்கிகளில் சேமிப்புக் கணக்கு இருந்த நிலையில் அவற்றை மூடிவிட்டு, பிஎம்சி வங்கியில் மட்டும் பரிவர்த்தனை செய்து வந்தேன். ஆனால், திடீரென சமீபத்தில் அந்த வங்கியில் நிதி பரிவர்த்தனைகளை முடக்கிவிட்டனர்.

எனது வங்கிக் கணக்கில் நிறைய பணம் இருந்தாலும் அதனை வெளியே எடுத்து என்னால் செலவு செய்ய முடியவில்லை. தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கி செலவு செய்து வருகிறேன். எனது தங்க நகைகளை விற்று, அந்த பணத்தை செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

இன்னும் சில நாளில் எனது வீட்டைக்கூட அடமானம் வைக்க நேரிடும், வருமான வரி செலுத்தும் என்னைப் போன்றவர்களுக்கு இந்த அரசு இப்படி ஒரு சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கவே இல்லை. நாங்கள் செலுத்தும் வருமான வரி எங்கே போனது? எதனால் இப்படி ஒரு பாதிப்பு எங்களுக்கு ஏற்படுகிறது என என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை,'' என்று வேதனையுடன் தெரிவித்தார்.