பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான நிகழ்வை பிரபல டிவி நடிகர் நான்கு நாட்கள் ரகசியமாக வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண் குழந்தை பிறந்ததை 4 நாட்கள் ரகசியமாக வைத்திருந்த டிவி நடிகர்! பரபரப்பு காரணம்!

கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய சீரியல்களில் ஹீரோவாக நடித்திருப்பவர் அமித் பார்க்கவ். இவரது மனைவி ஸ்ரீரஞ்சனி. இருவருமே விஜய் டிவியின் ஸ்டார் நடிகர்கள்.
அமித் பார்கவின் மனைவி ஸ்ரீரஞ்சனி கர்ப்பமாக இருந்தார். இவர்களுக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் அமித் பார்க்கவும் அவ்வப்போது தனது மனைவியின் உடல்நிலை குறித்து தகவல்களை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் திடீரென இன்று காலை தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறி ஒரு ட்வீட் செய்திருந்தார் அமித். ஆனால் குழந்தையோ அட்சய திருதியை அன்று அதாவது கடந்த 7ஆம் தேதி பிறந்ததாக அமித் தெரிவித்திருந்தார். ஏழாம் தேதி குழந்தை பிறந்த நிலையில் அதனை பதினோராம் தேதி வரை ரகசியமாக வைத்திருக்க வேண்டியது ஏன் என்று ஒரு கேள்வி எழுந்தது.
இதற்கு அட்சய திருதியை அன்று குழந்தை பிறந்த நிலையில் அதனை மிகவும் அதிர்ஷ்டமாக அமித் பார்க்ஸ் - ஸ்ரீரஞ்சனி தம்பதி கருதியுள்ளனர். இந்த தகவலை வெளியே கூறினால் குழந்தைக்கு அதிக அளவில் கண் பட்டுவிடும் என்பதால் தகவலை வெளியே விடாமல் ரகசியமாக வைத்திருந்த இன்று வெளியிட்டுள்ளார் அமித் பார்கவ்.
என்னதான் சென்டிமென்டாக இருந்தாலும் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியை கூடவா ரகசியமாக வைத்துக் கொள்வது என்று பார்கவ் ஸ்ரீரஞ்சனி ஜோடியை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.