வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு பொது இடத்தில் இடத்தில் ஆசிரியை செய்த திடுக் காரியம்! அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!

பேருந்துநிலையத்தில் இளம் ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடியில் சேகர் மற்றும் லதா இருவருக்கும் பிரியா என்னும் மகளும் மற்றும் அருண்குமார் என் மகனும் உள்ளனர்.  25 வயதான பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

சுபநிகழ்ச்சிக்காக உறவினரின் வீட்டிற்கு குடும்பத்துடன் செல்ல பிரியாவின் தந்தை சேகர் திட்டமிட்டிருந்தார். இதனால் பள்ளியில் விடுப்பு எடுப்பதற்காக எழுதிக்கொடுத்துவிட்டு வருகிறேன் என தாய் தந்தையிடம் கூறி விட்டு பிரியா வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். 

இந்நிலையில், பிரியா பள்ளிக்குச் செல்லாமல் பேருந்து நிலையத்தில் மதியம் ஒரு மணி அளவில் விஷம் குடித்துவிட்டு அதே இடத்திலேயே வாந்தி எடுத்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் சிலர் அருகில் வந்து பார்த்த போது, பிரியா இறந்தது தெரியவந்துள்ளது. 

உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரியாவின் இறந்த சம்பவம் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்த குடும்பம் தற்போது நிலைகுலைந்து வருத்தத்துடன் இருக்கிறது. பிரியாவின் இந்த திடீர் தற்கொலைக்கு யார் காரணம்? என்ற கோணத்திலும், ஏதேனும் பின்னணி உள்ளதா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.