உங்கள் கடன் பிரச்சினை தீர நீங்கள் இந்த நேரத்தில் சிவதரிசனம் செய்ய வேண்டும்!

ஜாதகத்தில் ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.


 பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் ஏழு ஜென்ம தோஷங்களும், பிரம்மஹத்தி தோஷமும் விலகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷம் ஆகும். 

ருணம் என்பது கடனை குறிக்க கூடியது. இந்நாளில் நந்தியை வணங்கி அருகம்புல் மாலைசாற்றி, நெய் தீபம் ஏற்றி, சிவபெருமானை பிரதோஷ மூர்த்தியாய் தரிசிப்பதன் மூலம் தோஷங்களில் இருந்து விடுபடலாம். சிவன் அபிஷேகப் பிரியன் என்பதால் பிரதோஷ தினத்தில் கறந்த பசும்பால் கொடுத்து வழிபட வேண்டும். இளநீர் வாங்கித் தரலாம். வில்வ இலை வாங்கிக் தரலாம். 

ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது. சந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்க கூடாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. மாற்றாக கடன் அடைப்பது சிறந்ததாகும். 

எந்த காரணத்திற்க்காக கடன் வாங்கினாலும் அது அடைய சனீஸ்வர பகவானின் அருள் தேவை. கடனிலிருந்து விடுபட தொடர்ந்து சனிஸ்வர பகவானை வழிபடுவது அவசியம். அவ்வப்போது திருநள்ளாறு, குச்சானூர், சனிசிங்கனாபூர், சென்னை பொழிச்சலூரில் உள்ள வடதிருநள்ளாறு எனும் ஸ்தலம் ஆகிய ஏதாவது ஒன்றுக்கு அவ்வபோது சென்று வரவேண்டும். 

செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷம் லக்ஷ்மி நரசிம்மருக்கு ஏற்ற காலம் ஆகும். செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு பானக நிவேதனம் செய்தாலும் கடன் விரைவில் அடையும். செங்கல்பட்டு அருகில் சிங்கபெருமாள் கோயில், பரிக்கல், திருச்சி ஸ்ரீ ரங்கம் காட்டழகிய சிங்கர் ஆகிய ஊர்களில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியை வழிபட அனைத்து கடன்களும் தீரும். 

கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெரும்பங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை விநாயகருக்கு செவ்வாய்க்கிழமைகளில் வெற்றிலை மாலை சாற்றுதல் செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்குதல், ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபடுதல் ஆகியவை மூலம் தீராத கடன் தீரும்.