செல்லூர் ராஜூ இப்படி ஏமாற்றலாமா..? செம சூடு வைக்கும் டிடிவி.தினகரன்

ரேஷன் கார்டு வைத்திருந்தாலே 50 ஆயிரம் ரூபாய் கடன் என்று முதலில் அறிவித்துவிட்டு, அதன்பிறகு, வணிகர்களுக்கு மட்டும்தான் அந்த கடன் என்று பின்வாங்கியவர் அமைச்சர் செல்லூர் ராஜூ.


இப்போது, அதுவும் நடக்கவில்லை என்று டி.டி.வி. தினகரன் ட்வீட் மூலம் அவரை வறுத்தெடுத்துள்ளார். குடும்ப அட்டை வைத்திருக்கும் சிறு வணிகர்களுக்கு ரூ.50,000/- கடன் வழங்கப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக செய்திகள் வருகின்றன.. அப்படியொரு கடன் திட்டம் பற்றி தங்களின் கவனத்திற்கே வரவில்லை என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுவதாக தகவல்கள் வருகின்றன. 

கொரோனா துயரால் ஏற்கனவே அல்லல்படும் மக்களை இப்படி அலைக்கழிப்பது வேதனைக்குரியது..அமைச்சரின் அறிவிப்பு உண்மையா? அதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதா? அப்படி ஒதுக்கப்பட்டிருந்தால் அந்த கடனைப் பெறுவதற்கான வழிமுறைககள் என்ன ? - என்பனவற்றை எல்லாம் தெளிவாகவும், வெளிப்படையாகவும் தமிழக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.