தில்லாலங்கடி தினகரனும் வீரத் தமிழன் பிரபாகரனும் ஒண்ணா? வைரல் போட்டோ!

அரசியல் தலைவர்களை இந்திரன், சந்திரன் என்றெல்லாம் புகழ்ந்து போஸ்டர் அடித்து, தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு அடிப்பொடிகள் அஸ்திவாரம் போடுவதுண்டு. அது, எல்லை மீறிப்போகிறது என்று தமிழ் தேசிய ஆர்வலர்கள் கொதித்துக் கிடக்கிறார்கள்.


நாடு, இனம், மொழி, மதம் கடந்து அனைத்து மக்களும் நேசிக்கும் ஒரே தலைவன் என்றால் அது, பிரபாகரன் மட்டும்தான். அவரது வீரத்தையும், நாட்டுப்பற்றையும், நேர்மையையும் எவரும் சந்தேகப்பட்டதே இல்லை. ஆனால், அப்படிப்பட்ட பிரபாகரனை, கேவலமான அரசியல்வாதி தினகரனுடன் ஒப்பிட்டு போஸ்ட் வருகிறதே என்பதுதான் தமிழ் தேசிய ஆர்வலர்களின் கொந்தளிப்பு.

அதாவது பிரபாகரன் உடையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் இருப்பது போன்று ஒரு படம் இணையதளங்களில் உலா வருகிறது. அந்தப் படத்தின் கீழ், ‘தமிழினத்தின் தலைவன் பிரபாகரன், தமிழகத்தின் தலைவன் தினகரன்’ என்று குறிப்பிட்டு உலா வருகிறது. இது நிச்சயம் அ.ம.மு.க.வின் ஐ.டி.விங்க் செய்யும் வேலைதான் என்று அடித்துச் சொல்கிறார்கள்.

அதனால் இப்படி ஒரு பதிவு போட்டதற்காக தினகரன் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்று தமிழ் தேசியவாதிகள் கொந்தளித்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை தினகரன் இதனை கண்டுகொள்ளவே இல்லை. 

அவருக்கும் அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதோ என்னவோ..?