தமிழிசையுடன் மல்லுக்கட்டும் திருச்சி சூர்யா

அண்ணாமலைக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் கொடுத்துவரும் திருச்சி சூர்யா, இப்போது தமிழிசை செளந்தரராஜனுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார். இவரை அண்ணாமலை அடக்கி வைக்கவில்லை என்பதால், அவரது உத்தரவுப்படியே பேசுவதாக கூறப்படுகிறது.


செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, ‘’பெரிய சாம்ராஜ்யமான அதிமுக பல இடங்களில் தடம் தெரியாமல் போய்விட்டது, சில இடங்களில் இன்று டெபாசிட் இழந்துள்ளது இதற்கு முக்கிய காரணம் பாஜகவால் தோல்விகள் அதிகமாகிறது, சிறுபான்மையினர் வாக்கு குறைகிறது என்று சொன்ன அதிமுக, இப்போது கூட்டணி பிரிந்த பிறகு கீழே சென்றுள்ளார்கள் என்று பார்த்தால் அதிமுகவை விட தமிழகத்தில் பாஜக செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பது தெரிகிறது, 2024 அதிமுகவை பின்னுக்கு தள்ளி இருக்கிறோம், 2026 திமுகவை பின்னுக்கு தள்ளி ஆட்சிக்கு வருவோம்.

நான் திமுகவில் இருந்த போது எனது மகன் பிறந்த நாளுக்கு தமிழிசை அக்கா வந்துள்ளார்கள். தனிப்பட்ட முறையில் என்மீது பாசமானவர். ஆனால் கட்சி ரீதியாக பார்த்தால் அவர் தலைவராக இருக்கும்போது நான் பாஜகவிற்கு வரவில்லை. அவரைப் பரட்டை என்று கூறிய போது அவருக்கு கோபம் வந்தது ஆனால் அண்ணாமலையின் புகைப்படத்தை ஒட்டி அதை திமுகவினர் திட்டியதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன். தற்போது கட்சியில் இருப்பவர்கள் மீது எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை அப்படி இருந்தாலும் அது முன்னாள் இருந்த தலைவர்களால் தான் இருக்கும். ஆனால் சம்பந்தமில்லாமல் எங்கள் தலைவரை குற்றம் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாததால் தான் அப்படி பதிவிட்டேன்.

அடுத்த பாஜக மாநில தலைவர் தமிழிசை என்பதால்தான் இந்த பிரச்சனையா என்ற கேள்விக்கு: 2027 வரை அண்ணாமலையே மாநிலத் தலைவராக தொடர்வார். 2026 இல் முதல்வராவார். மதுரையில் பாஜக வேட்பாளர் சரியாக வேலை பார்க்கவில்லை என்ற கேள்விக்கு: ஏற்கனவே அவருக்கும் எனக்கும் வாய்காத் தகராறு உள்ளது. மதுரையை பொருத்தவரையில் நல்ல வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். களத்தில் இறங்கி வேலை பார்த்ததால் தான் இந்த வாக்குகள் கிடைத்தது, வரக்கூடிய நாட்களில் அனைத்து தொகுதிகளிலும் இது வேலைகள் நடைபெறும்’’ என்று கூறினார்.

திருச்சி சூர்யாவுக்கு எதிராக தமிழிசை என்ன பேசப்போகிறார்..?